2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

நிரூபம ராவ் நாளை கிழக்கு மாகாணத்துக்கு விஜயம்

Menaka Mookandi   / 2010 ஓகஸ்ட் 31 , மு.ப. 08:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எஸ்.வதனகுமார், எல்.தேவ்)

நான்கு நாள் உத்தியோக பூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள இந்திய வெளியுறவு செயலாளர் நிருமா ராவ், நாளை புதன்கிழமை கிழக்கு மாகாணத்துக்கு விஜயம் செய்யவுள்ளார்.

நாளை காலை 10.00 மணிக்கு திருகோணமலையில் உள்ள முதலமைச்சர் செயலகத்தில்  கிழக்கு மாகாண முதலமைச்சர் சந்திரகாந்தனுக்கும் இந்திய வெளியுறவுச் செயலாளருக்குமிடையிலான முக்கிய சந்திப்பொன்று இடம்பெறவுள்ளதாக முதலமைச்சரின் ஊடகச் செயலாளர் ஆ.தேவராஜா தெரிவித்துள்ளார்.

இந்த முக்கிய கலந்துரையாடலின் போது, குறிப்பாக கிழக்கு மாகாண சபையின் முன்னெடுப்புக்கள் மற்றும் மாகாணத்தின் அபிவிருத்திச் செயற்பாடுகள், அத்தோடு தற்போது கிழக்கு மாகாணத்தில் மீளக்குடியேறியுள்ள மக்களுக்கான வீடுகள் அமைப்பது தொடர்பாகவும் விரிவாக பேசப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது. 

மேலும் தற்போது எல்லோராலும் பேசப்பட்டு கொண்டிருக்கும் அரசியல் அமைப்பு திருத்தச் சட்ட மூலம்குறித்தும் பேசப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதேவேளை, நிரூபமா ராவை, முதலமைச்சர் சந்திரகாந்தன் இன்று உத்தியோகபூர்வமற்ற முறையில் சந்தித்தமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .