2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

மட்டு. மாவட்டத்தின் கரையோரங்களை பாதுகாப்பதற்காக ஒரு இலட்சம் சவுக்கு மரங்கள்

Suganthini Ratnam   / 2010 செப்டெம்பர் 06 , மு.ப. 10:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(வ.சக்திவேல்)

மட்டக்களப்பு மாவட்டத்தின் கரையோரப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ், ஒரு இலட்சம் சவுக்கு மரங்கள் வாகரை தொடக்கம் பொத்துவில்வரையான கரையோரத்தை அண்டியதாக நடப்பட்டுள்ளன.

மண்ணரிப்பைத் தடுக்கும் முகமாகவும் ஆழிப் பேரலையிலிருந்து பாதுகாத்துக் கொள்ளும் முகமாகவுமே இவ்வாறு மரங்கள் நடப்பட்டுள்ளன.

தேத்தாத்தீவு, ஒந்தாச்சிமடம், சூரையடி, சமுத்திரபுரம் ஆகிய பிரதேசங்களில் தற்போது மரங்கள் வெட்டப்பட்டு வெற்றிலைக் கொடிகளுக்காகவும் வீட்டு வேலிகளுக்காகவும் தோட்டங்களுக்காகவும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

இது விடயத்தில் பிரதேச செயலாளர்கள், மத்திய சுற்றாடல் அதிகார சபையினர் தடுத்து நிறுத்தப்படாதது ஏன் என்றும் கேள்வியெழுகின்றது.

இது இவ்வாறிருக்க, களுவாஞ்சிக்குடி சமுத்திரபுரம் ஒந்தாச்சிமடம், சித்தாண்டி, தேத்தாத்தீவு, செட்டிபாளையம் போன்ற இடங்களில் தொடர்ந்து சட்டவிரோத மண் அகழ்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதுடன், அங்கு மண்ணரிப்புக்களும் இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றன.

இந்த விடயத்தை அண்மையில் நடைபெற்ற மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில்  சிரேஷ்ட ஊடகவியலாளரும் பொறியியலாளரும் விரிவுரையாளருமான சாமித்தம்பி ரவீந்திரன், பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷவின் கவனத்திற்கு கொண்டு வந்திருந்தார்.

இதனை ஆராய்ந்த அமைச்சர் பசில் ராஜபக்ஷ, எங்காவது சட்டவிரோத மண் அகழ்வு நடைபெற்றால் அதனை உடனடியாகத் தடுத்து நிறுத்துமாறும், அவர்களுக்கு எதிரான சட்ட நடவடிக்கையினை மேற்கொள்ளுமாறும் உதவி பொலிஸ் அத்தியட்சகர், பிரதேச செயலாளர்கள், ஏனைய சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கும் உத்தரவிட்டார்.









































































































































 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .