2024 மார்ச் 28, வியாழக்கிழமை

ஏறாவூரில் காட்டாக்கலி மாடுகள் தொல்லை

Menaka Mookandi   / 2010 செப்டெம்பர் 07 , மு.ப. 07:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஆர்.அனுருத்தன்)

மட்டக்களப்பு - வாழைச்சேனை நெடுஞ்சாலையில் ஏறாவூர் நகர பிரதான வீதிகளில் கட்டாக்காலி மாடுகளின் தொல்லை காரணமாக பொது மக்களும், வாகன சாரதிகளும் பல்வேறு சிரமங்களுக்கும் கஷ்டங்களுக்கும் உள்ளாகுவதாக பரவலாக புகார் தெரிவிக்கப்படுகின்றது.
    
இரவும் பகலும் வீதிகளில் திரியும் இந்த கட்டாக்காலி மாடுகளினால் விபத்துக்களும் எற்படவதாக அப் பிரதேச மக்கள் தெரிவிக்கின்றார்கள். பிரதான வீதிகளில் கட்டாக்காலி மாடுகளின் நடமாட்டம் தொடர்பாக பிரதேச சபையின் கவனத்திற்கு பல தடவைகள் கொண்டு வரப்டப்ட போதிலும் எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்படுவதாக இல்லை என்றும் உள்ளுர் மக்கள் தெரிவிக்கின்றனர்
    
ஏறாவூர் மணிக்கூட்டு கோபுர சந்தியில்  அதாவது பொலிஸ் நிலையத்திற்கு அருகாமையில் கூட கட்டாக்காலி மாடுகள் குழுமியிருப்பதை படங்களில் காணலாம்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X