2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

தொழில் வாய்ப்பற்ற இளைஞர்களுக்கு சாரதிப்பயிற்சி

Kogilavani   / 2010 செப்டெம்பர் 10 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஆர்.அனுருத்தன்)

கிழக்கு மாகாணத்தில் தொழில்வாய்ப்பின்றி இருக்கின்ற இளைஞர்களுக்கு தொழில் பயிற்சிகளை வழங்கும் முகமாக முதலமைச்சர்  நிதி ஒதுக்கீட்டின் மூலம் கிழக்கு மாகாண சபையினால்  பல்வேறு திட்டங்கள் அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றது. மாகாணத்தில் வேலைவாய்ப்பின்றி இருக்கின்ற இளைஞர்களுக்கு சாரதிப் பயிற்சி நெறியினை வழங்கும் திட்டத்தினை கிழக்கு மாகாண முதலமைச்சர் சி.சந்திரகாந்தன் தனது நிதி ஒதுக்கீட்டின் மூலம் கிழக்கில் ஆரம்பித்துள்ளார்.  

மட்டக்களப்பு மாவட்டத்தின் வாழைச் சேனைப்பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள சுமார் 30 இளைஞர்களுக்கு சாரதிப் பயிற்சி நெறியினை மேற்கொள்வதற்கான அனுமதி அட்டையினை கிழக்கு மாகாண முதலமைச்சர் சி. சந்திரகாந்தன் வழங்கி வைத்தார்.

பேத்தாழை குகநேசன் கலாசார மண்டபத்தில் வாழைச்சேனைப் பிரதேச செயலாளர் எஸ் கிரிதரன் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில், கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி நீர்ப்பாசண கிராமி மின்சார அமைச்சர் எம். எஸ் உதுமாலெவ்வே கிழக்கு மாகாணசபை உறுப்பினர் பூ. பிரசாந்தன், வாழைச்சேனைப் பிரதேச சபைத் தவிசாளர் தா. உதயஜீவதாஸ் மற்றும் கிழக்கு மாகாண முதலமைச்சர் செயலகத்தின் திட்டமிடல் பணிப்பாளர் கௌரிதரன் சேவாலங்கா அமைப்பின் பிரதிநிகளும் கலந்து கொண்டனர்.
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .