2024 மார்ச் 28, வியாழக்கிழமை

தங்கத்தை கொடுத்தாலும் வட, கிழக்கு மக்கள் த.தே.கூ.வை கைவிடமாட்டார்கள்

Menaka Mookandi   / 2011 ஏப்ரல் 12 , மு.ப. 08:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஜதுஷன்)

வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள் தனித்துவமானவர்கள், யாவும் அறிந்தவர்கள், வரலாறு தெரிந்தவர்கள், கொள்கை மாறாதவர்கள், இந்நிலையில் அற்ப சொற்ப சலுகை அனுபவித்துக் கொண்டிருப்பவர்கள் மக்களின் முன் வந்து தங்கத்தை கொடுத்தாலும் தமிழ் தேசிய கூட்டமைப்பை என்றும் கைவிடமாட்டார்கள் என மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் பாக்கியசெல்வம் அரியநேத்திரம் தெரிவித்தார்.

படுவான்கரைப் பிரதேசத்தின்  அம்பிளாந்துறையில் இடம் பெற்ற மக்கள் சந்திப்பு ஒன்றிலேயே இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், 'சித்தாத்தன், ஆனந்தசங்கரி, சிவாஜிலிங்கம் போன்றோரை தமிழ் தேசிய கூட்டமைப்பில் இணைத்தல் தொடர்பாக பலர் விமர்சித்தார்கள். நானும் ஆரம்பத்தில் விமர்சித்தேன்.

ஆனால் இது காலத்தின் தேவை. இணைத்துக் கொள்ளப்பட்ட மூவரும் எங்கள் கட்சியின் கொள்கைகள் பலவற்றை அன்றும் ஏற்றுக்கொண்டிருந்தார்கள்.
நாங்களும் அவர்களின் கடந்தகால சில கொள்கைகளை ஏற்றுக்கொள்ள வேண்டும்.

ஒரு சில கொள்கைகளில் கருத்து முரன்பாடு இருந்தாலும் அவற்றை பேசித் தீர்த்துக் கொள்ளலாம். கட்சியை விமர்சிப்பவர்கள் எந்த நேரத்திலும் வெளியேறலாம். ஒருவர் வெளியேறினால் அது அவர்களுக்குத்தான் நட்டம்.

இதுவரை காலமும் வெளியேறியவர்கள் தற்போது என்ன செய்கிறார்கள்? என்ன நடந்து? தூக்கி எறியப்பட்டார்கள், அவர்களின் அரசியல் அஸ்தமனமாகியது.  எனவே யாரும் கட்சியை விமர்சித்து விட்டு வெளியேறினால் அவர்களுக்குத்தான் நட்டம்.

ஒருவர் வெளியேறினால் ஆயிரம் பேர் கட்சியில் இணைய தயாராக உள்ளனர். இறுதியாக ஒன்றைமட்டும் உறுதியாக கூறிக்கொள்கின்றேன். காலத்தின் தேவைக்கேற்ப மூவரையும் தமிழ் தேசிய கூட்டமைப்பில் இணைத்துக் கொண்டமை சரியானதாகும்' என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X