2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

காத்தான்குடி குட்வின் சந்தி கடை வளாகத்தை வேலியிட்டு அடைக்கும் பள்ளிவாசல் நிர்வாகம்

Menaka Mookandi   / 2011 நவம்பர் 29 , மு.ப. 07:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 

(எம்.சுக்ரி)

மட்டக்களப்பு மேன்முறையீட்டு நீதிமன்ற இடைக்கால தடையுத்தரவையடுத்து காத்தான்குடி நகர சபையினால் உடைக்கப்பட்ட காத்தான்குடி குட்வின் சந்தியிலுள்ள மெத்தைப்பள்ளிவாயலுக்கு சொந்தமான கடைகள் இருந்த வளாகத்தை வேலியிட்டு அடைக்கும் நடவடிக்கையை இன்று மெத்தைப் பள்ளிவாசல் நிருவாகம் மேற்கொண்டது.

நேற்று மட்டக்களப்பு மேன்முறையீட்டு நீதிமன்றம், காத்தான்குடி நகரசபைக்கு வழங்கிய இடைக்கால தடையுத்தரவையடுத்து அவ்விடத்தை பாதுகாக்கும் நோக்கில் வேலியிட்டு அடைக்கப்படுவதாக மெத்தைப்பள்ளிவாசலின் தலைவர் மர்சூக் அகமது லெவ்வை தெரிவித்தார்.

இது தொடர்பாக காத்தான்குடி நகரசபை தவிசாளர் எஸ்.எச்.அஸ்பரிடம் கேட்டபோது, 'நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவை மாத்திரம்தான் வழங்கியுள்ளது. மெத்தைப்பள்ளிவாசலுக்கு அவ்விடத்தை அடைப்பதற்கு நீதிமன்றம் அதிகாரம் வழங்கவில்லை. நீதிமன்ற உத்தரவை மீறி மெத்தைப்பள்ளிவாயல் நிருவாகத்தினர் செயற்படுகின்றனர். இது தொடர்பில் நான் சட்ட நடவடிக்கை எடுப்பேன்' என அவர் தெரிவித்தார்.

கடந்த சனிக்கிழமையன்று காத்தான்குடி குட்வின் சந்தியில் மெத்தைப்பள்ளிவாசலுக்கு சொந்தமான கடைகளை காத்தான்குடி நகரசபை சட்டவிரோத கட்டிடங்கள் என தெரிவித்து 9 கடைகளை உடைத்தமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .