2024 மார்ச் 28, வியாழக்கிழமை

மட்டு, உள்ளூராட்சி தேர்தல்களில் 60 பெண்களை நிறுத்த திட்டம்

Menaka Mookandi   / 2010 செப்டெம்பர் 05 , மு.ப. 10:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(றிபாயா நூர்)

அரசியல், கலாசார மாற்றத்திற்காக அரச சார்பற்ற நிறுவனமான சீடோ ஸ்ரீ லங்கா நிறுவனமானது கடந்த வெள்ளிகிழமை காத்தான்குடியிலுள்ள பெண்களுக்கான வலுவூட்டலுக்கும் அபிவிருத்திக்குமான அமைப்பின் ஒத்துழைப்புடன் சீடோ ஸ்ரீ லங்கா அமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட உதவி இணைப்பாளர் டீ.ஞானேஸ்வரி தலைமையில் பெண்களுக்கான கருத்தரங்கு ஒன்றினை நடத்தியது.

"அரசியல் உருமாற்றத்திற்கான பெண்களின் வலையமைப்பு" எனும் தலைப்பில் நடைபெற்ற இக் கருத்தரங்கில் சீடோ ஸ்ரீ லங்கா அமைப்பின் நிதி மற்றும் திட்டமிடல் பணிப்பாளர் எச்.ஜே.ரத்னவீர பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

பெண்கள் அரசியல் தீர்மானங்கள் எடுப்பதற்காகவும், அபிவிருத்தி பற்றி தீர்மானிக்கும் செயற்பாடுகளில் செயலாற்றக்கூடிய பெண்களின் பிரதிநிதித்துவத்தை எதிர் காலத்தில் பெற்றுக் கொள்வது தொடர்பாகவும் இங்கு கலந்துரையாடப்பட்டது.

எதிர் காலத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் பிரதேச சபைஇ நகர சபைஇ மாநகர சபை ஆகியவற்றுக்கு பெண்களின் பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்துவதற்காக 200பேர் தெரிவு செய்யப்பட்டு அவரவர் விரும்பும் கட்சிகளில் போட்டியிடுவதற்கு 60பெண் வேட்பாளர்களை தயார்படுத்துவதே தமது அமைப்பின் நோக்கமென மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் ஏ.எல்.முகம்மட் சினாஸ் தெரிவித்தார்.

அரசியல் கட்சிகளிடம் வேட்பு மனுக்களில் பெண்களின் பெயர்களை உள்ளடக்குமாறு கோரிக்கை வைக்கின்றபோது  தகுதியான பெண் வேட்பாளர்கள் இல்லையென அரசியல் தலைவர்கள் தொடர்ந்தும் முன்வைக்கும் காரணத்தினை இவ்வாறான தயார்படுத்தல் மூலம் இல்லாமல் செய்ய முடியும் என்பதை கருத்திற் கொண்டு அம்பாறை மற்றம் மொனராகலை மாவட்டங்களிலும் இவ்வாறான செயற்பாடுகளை ஆரம்பித்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.


 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X