2024 மார்ச் 28, வியாழக்கிழமை

வெருகல் படுகொலைகளின் 7 ஆம் ஆண்டு நினைவுதினம் அனுஷ்டிப்பு

Super User   / 2011 ஏப்ரல் 10 , பி.ப. 03:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ஆர்.அனுருத்தன், ஸரீபா, எம்.சுக்ரி, கெலும் பண்டார)

மட்டக்களப்பு வெருகல் படுகொலையின் 7ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று ஞாயிற்றுக்கிழமை தமிழ் மக்கள் விடுதலை புலிகளின் கட்சி தலைவரும் முதலமைச்சருமான சிவனேசதுரை சந்திரகாந்தன் தலமையில் வெருகல் மலைமக்கள் பூங்காவில் நடைபெற்றது.

தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த இருநூற்றுக்கும் அதிகமானோர்  தமிழீழ வீடுதலை புலிகளினால் வெருகல் வாவியில் வைத்து படுகொலை செய்யப்பட்டதன் நினைவாக தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியினால் இவ் வெருகல் படுகொலை நினைவு தினம் அனுஷ்டிக்கப்பட்டது.

இதில் கிழக்கு மாகாண விவசாயத்துறை அமைச்சர் துரையப்பா நவரட்னராஜா, கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான என்.திரவியம், பூ.பிரசாந்தன், ஏ.கிருஸ்நானந்தராஜா, இரா.துரைரட்ணம், எஸ்.ஜவாஹிர் சாலி, வாகரை பிரதேச செயலாளர் ஆர்.ராவுலநாயகி, மற்றும் உள்ளுராட்சி மன்றங்களின் தவிசாளர்கள், பெற்றோர்கள் உட்பட  பலர் கலந்துகொண்டனர்.

இந் நிகழ்வில் கிழக்கு மாகாண முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலை புலிகளின் தலைவருமாகிய சிவநேசதுரை சந்திரகாந்தன் உரையாற்றுகையில்,

'இன்றைய நாள் கிழக்கு மக்களின் விடிவிற்காக வித்திட்ட வீரமறவர்களை நினைவுகூறும் ஒரு சோக நாள் இத்தினத்தில் எம் சமூகத்தின் மறுமலர்ச்சி;க்கும் அரசியல் ரீதியான தனித்துவத்திற்கும் களமமைத்து தம்மை வித்தாக்கி அதில் சமூகத்தின் எழுச்சியை விருட்சமாக்கிய எம் உன்னத மாவீரர்களை நினைவு கூறும் ஒரு புனித நாள் இத் தருணத்தில் அவர்களின் ஆத்ம ஈடேற்றத்திற்காகவும் அவர்களின் எண்ணக்கிடக்கைகளை நிறைவேற்றவும் ஆத்மாத்தமாக பிரார்த்திக்கின்றேன்.

7 வருடங்களுக்கு முன்னர் இதே தினத்தில் இதே இடத்தில் அரங்கேறிய கொடூரமான சகோதர படுகொலை தான் எமது சமூகம் தனித்துவம் சார்ந்த அரசியல் ரீதியான பாரிய மறுமலர்ச்சிக்கான வித்தாக அமைந்தது.

ஒடுக்கப்பட்ட ஒரு சமூகத்தி;ன் பிரதிநிதிகளாகிய நாங்கள் அச்சமூகத்தின் விடிவிற்காக உரிமைக்காக நல்வாழ்விற்காக எங்களையே அர்ப்பணித்து விடுதலைப் போரில் ஐக்கியமானோம் எங்களைப் போன்று தாய் மண்ணின் மீதும் பற்று கொண்ட சமூகத்தின் உரிமை மீதும் தீராத தாகம் கொண்ட பல்லாயிரக்கணக்கான இளைஞர் யுவதிகள் தங்களையே அர்ப்பணித்து விடுதலை பெற முன்வந்தார்கள்.

ஆனால், எங்களைப் போன்ற அவ்விளைஞர் யுவதிகளின் தியாகங்களும் அர்ப்பணிப்புகளும் ஓர் வரையறைக்கு அப்பால் வீணாகி போய்விட்டது. பாரிய உயிரிழப்புக்கள் உடைமை இழப்புக்கள் உட்கட்டமைப்பு சீர் குலைவு நாளுக்கு நாள் இடம் பெயர்வு அகதி வாழ்க்கை என்பன பன்மடங்காக பல்கிப்பெருகியதே தவிர, போராட்டத்தினால் குறைவடையவில்லை.

 இவற்றிற்கெல்லாம் காரணம் என்ன வெண்று தேடிய போதுதான் இராணுவ ரீதியில் பெறப்பட்ட அனைத்து வெற்றிகளும் அரசியல் மயமாக்கப்பட வில்லை என்ற உண்மை காலம் கடந்து புலனாகியது

 எம்மவர் மீதான சகோதரப் படுகொலை தமிழர் வரலாற்றிலே அறுதியும் இறுதியுமாக அமைய வேண்டும் எம் மாவீரச் செல்வங்களின் தியாகங்களின் விளைவால் பெறப்பட்ட ஜனநாயக சூழல் கிழக்கில் தொடர்ந்தும் வலுப்பெற நாங்கள் அனைவரும் ஒன்றிணைந்து செயற்படுவதோடு ஒட்;டு மொத்த தமிழ் சமூகத்தின் தீர்வு விடயங்களிலும் அவர்களது அரசியல் அபிலாசைகள் விடயங்களிலும் ஒருமித்த கருத்தோடு ஒற்றுமையாய் பயணிக்க என்றும் நாம் தயார். என்ற செய்தியையும் சொல்லி வைக்க விரும்புகிறேன்" என்று தெரிவித்தார்.   



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X