2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

பொலிஸ் அதிகாரி மாரடைப்பினால் மரணம்

Kogilavani   / 2016 டிசெம்பர் 14 , மு.ப. 04:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

மொஹொமட் ஆஸிக்

வழக்கொன்றில் குற்றஞ்சாட்டப்பட்டிருந்த சந்தேக நபர் ஒருவரை கைது செய்வதற்காக கண்டி தவுலகல பிரதேசத்துக்குச் சென்ற உதவி பொலிஸ் இன்ஸ்பெக்டர் ஒருவர், மாரடைப்பினால் உயிரிழந்துள்ளார்.

கண்டி பொலிஸ் நிலையத்தில் பணியாற்றி வந்த  உதவி பொலிஸ் இன்ஸ்பெக்டர் ஒருவரே இவ்வாறு, செவ்வாய்க்கிழமை (13) உயிரிழந்துள்ளார்.

வழக்கொன்றில் குற்றஞ்சாட்டப்பட்டிருந்த நபரை கைதுசெய்வதற்காக மேற்படி பொலிஸ் இன்ஸ்பெக்டர் அடங்கிய குழுவொன்று,  கண்டி தவுலகல பிரதேசததுக்குச் சென்றுள்ளது.

சந்தேக நபரை கைது செய்ய முயற்சிக்கும்போது பொலிஸாருக்கும் சந்தேக நபருக்கும் இடையில் தகராரு ஏற்பட்டுள்ளது. அச்சமயம் திடீரென உதவி பொலிஸ் இன்ஸ்பெக்டர், சுகவீனமுற்று போராதனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டப்போதிலும் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இவர் மாரடைப்பினால் உயிரிழந்ததாக வைத்தியசாலை நிர்வாகம் தெரிவித்தது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .