2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

ஹட்டனில் கட்டிட நிர்மாணம் விஸ்தரித்தலுக்கு தற்காலிக தடை

Kogilavani   / 2011 ஏப்ரல் 09 , மு.ப. 10:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.சுவர்ணஸ்ரீ)

ஹட்டன் - டிக்கோயா நகரசபைக்கு உட்பட்ட பகுதிகளில் மறு அறிவித்தல் வரை கட்டிட நிர்மாணம்  மற்றும் கட்டிட விஸ்தரிப்பு போன்ற நடவடிக்கைகள் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக ஹட்டன்- டிக்கோயா நகரசபையின் தலைவர் ஏ. நந்தகுமார் தெரிவித்தார்.

ஹட்டன் நகரில் அண்மையில் இடம் பெற்ற திடீர் தீ விபத்தினைத்  தொடர்ந்து சட்டமா அதிபர் மற்றும் நகர அபிவிருத்தி அதிகார சபையின் அதிகாரிகளுக்கிடையில் இடம் பெற்ற பேச்சுவார் த்தை ஒன்றின் போதே இந்தத்தீர்மானம் மேற்கொள்ளப்;பட்டுள்ளது.

இதற்கேற்ப ஹட்டன் - டிக்கோயா நகரசபைக்கு உட்பட்ட பகுதிகளில் புதிய கட்டிடங்கள் நிர்மாணித்தல் தற்போதிருக்கும் கட்டிடங்களை விஸ்தரித்தல் போன்ற  நடவடிக்கைகளை இடை நிறுத்தி வைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை இந் நகரசபைக்குட்பட்ட பகுதிகளில் சட்டவிரோத நிர்மாணங்களைக் கண்டறிந்து அகற்றுவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என ஹட்டன் - டிக்கோயா நகரசபையின் தலைவர் ஏ.நந்தகுமார் தெரிவித்தார்.
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X