2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

க.பொ.த. (சா/த) பரீட்சையில் கூடிய புள்ளிகளை பெற்ற மாணவர்கள் கௌரவிப்பு

Kogilavani   / 2011 ஏப்ரல் 08 , மு.ப. 11:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

கடந்த 2010 ஆம் ஆண்டுக்கான கல்வி பொதுத் தராதர சா/தர பரீட்சையில் அகில இலங்கை ரீதியில் அதி கூடிய புள்ளிகளை பெற்று முதல் இடத்திற்கு தெரிவான மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை அலரி மாளிகையில் நடைபெற்றது.

இதன்போது முதல் மூன்று இடங்களை பெற்றுக்கொண்ட மாணவர்களுக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபகஷ சான்றிதழ்களையும்,  பதக்கங்களையும்,  பரிசில்களையும் வழங்கி  கௌரவித்தார்.

இந்நிகழ்வில் கல்வியமைச்சர் பந்துல குணவர்த்தன, அமைச்சின் செயலாளர் எச்.எம். குணசேசகர,  முதலமைச்சர் பிரசன்ன ரணதுங்க, அதுல விஜேதுங்க,  மற்றும் சரத் ஏக்கநாயக்க ஆகியோர் கலந்து கொண்டனர்.

முதலாம் இடத்தை பெற்ற  கொழும்பு , விசாகா வித்தியாலத்தைச் சேர்ந்த மாணவி மயூரி யசோதா, இரண்டாம் இடத்தைப் பெற்ற குருநாகலை மலியதேவ வித்தியாலய மாணவன் எம்.ஆர். மொஹமட்,  மூன்றாம் இடத்தை பெற்ற ஹேலியகொட முஸ்லிம் மகா வித்தியாலய மாணவி டி.டி. அமயா ஆகியோருக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ  சான்றிதழ்களையும் பதக்கங்களையும், பரிசில்களையும் வழங்கி வைத்தார்.(Pix by: Sudath Silva)


 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .