2024 மார்ச் 28, வியாழக்கிழமை

’சாவகச்சேரி ஆயுர்வேத சிகிச்சைப் பிரிவு மீண்டும் ஆரம்பமாகும்’

Editorial   / 2020 மார்ச் 16 , மு.ப. 10:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.குகன்

சாவகச்சேரி நகர சபையில், சித்த மருத்துவத்துறையினரால் நடத்தப்பட்டு கடந்த மாதம் இடைநிறுத்தப்பட்ட இலவச ஆயுர்வேத சிகிச்சைப் பிரிவு, மீண்டும், வரும் வியாழக்கிழமை ஆரம்பமாகுமென்று, சாவகச்சேரி நகரசபைத் தவிசாளர் திருமதி சிவமங்கை இராமநாதன் அறிவித்துள்ளார்.

இது குறித்துத் தொடர்ந்துரைத்த அவர், சாவகச்சேரி நகர பகுதியில், மக்களின் வேண்டுகோளின் பிரகாரம், மாகாண சித்த மருத்துவத் துறையினரால், ஆறு மாதங்களுக்கு முன்னர் சபை அலுவலகக் கட்டடத்தில் இந்தச் சிகிச்சை நிலையம் பிரதி வியாழக்கிழமைகளில் செயற்பட்டதாகத் தெரிவித்தார்.

சிகிச்சை நடைபெறும் தினங்களில், பெருமளவு மக்கள் சிகிச்சை பெற்றனரெனத் தெரிவித்த அவர், இந்நிலையில், காரணங்கள் எதுவும் தெரிவிக்கப்படாமல் திடீரென சிகிச்சை நிறுத்தப்பட்டதால், சிகிச்சை பெற்று வந்த மக்கள் தொடர் சிகிச்சைக்காக கைதடிக்குச் செல்லும் நிலை ஏற்பட்டதாகவும் கூறினார்.

கடந்த மாத அமர்வில், ஆயுர்வேத சிகிச்சைப் பிரிவை மீண்டும் ஆரம்பிக்க வேண்டுமென உறுப்பினர் யோ.ஜெயக்குமார் முன்வைத்த முன்மொழிவை சபை ஏற்றுக் கொண்டதாகவும் இதையடுத்து, தவிசாளரால் உரிய தரப்பினருக்கு அறிவிக்கப்பட்டதாகவும் கூறினார்.

அத்துடன், திணைக்கள அலுவலகத்துக்கு நேரில் சென்று உயர் அதிகாரிகளுடன் கலந்துரையாடிய நிலையில்,
இந்நிலையில் எதிர்வரும் 19ஆம் திகதி தொடக்கம் பிரதி வியாழக்கிழமைகளில் ஆயுர்வேத சிகிச்சை நிலையம் இயங்கும் என்று தவிசாளரால் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், அவர் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X