2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

வடக்குக்கு 5 ஆயிரம் இராணுவம் காணும்: சுரேஸ் பிரேமச்சந்திரன்

Kogilavani   / 2016 மார்ச் 25 , மு.ப. 10:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.றொசாந்த்

'இலங்கையில் 2 இலட்சம் இராணுவம் இருக்கின்ற நிலையில் அதில் 1½ இலட்சம் இராணுவம் வடக்கில் நிலைகொண்டுள்ளது. 20 ஆயிரம் இராணுவம் மட்டக்களப்பிலும், 30 ஆயிரம் இராணுவம் ஏனைய மாகாணங்களிலும் நிலைகொண்டுள்ளனர். வடக்குக்கு 5 ஆயிரம் இராணுவத்தினர் போதும்' என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.

நீர்வேலியில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் வெள்ளிக்கிழமை (25) நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து கூறுகையில்,

'வடக்கில் அதிகளவான இராணுவம் இருப்பதால், தமிழ் மக்கள் நிம்மதியாகவும், கௌரவமாகவும் வாழ முடியாதுள்ளது. அரசாங்கம் வடக்கிலிருந்து இராணுவத்தை வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வலிகாமம் வடக்கு மாத்திரமின்றி தமிழ் மக்களின் ஒட்டுமொத்த பூர்வீக நிலங்களிலிருந்தும் இராணுவம் வெளியேறவேண்டும். இராணுவம் வெளியேறினால், மக்களின் காணிகள் அவர்களுக்கு கிடைக்கும்' என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .