2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

ஜனாதிபதி, ஐ.ம.சு.மு. யாழ். மாவட்ட அமைப்பாளரின் கீழ் செயற்படவுள்ளேன்: மாநகரசபையின் ஆளும் கட்சி உறுப்

Suganthini Ratnam   / 2011 ஏப்ரல் 06 , மு.ப. 03:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(தாஸ்)

யாழ். மாநகரசபையில் முதல்வர் உட்பட ஏனைய சில உறுப்பினர்கள் சேர்ந்து மாநகரசபையின் சொத்துக்களை தவறான முறையில் பயன்படுத்தியும் அழித்தும் அடாவடித்தனம் பண்ணுகின்றனர். இதன் காரணமாக இனிவரும் காலங்களில் ஜனாதிபதியின் கீழும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்ணணியின் யாழ். மாவட்ட அமைப்பாளர் அங்கஜன் இராமநாதனின் கொள்கைகளின் கீழும் இணைந்து செயற்படவுள்ளதாக மாநகரசபையின் ஆளும் கட்சி உறுப்பினரும் வைத்தியருமான எஸ்.நிசாந்தன் ஊடகங்களுக்கு பகிரங்கமாக அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக மேலும் தெரிவித்த அவர்,

யாழ். மாநகரசபையில் முதல்வர் உட்பட ஏனைய சில உறுப்பினர்களும் சேர்ந்து மாநகரசபையின் சொத்துக்களை தவறான முறையில் பயன்படுத்தியும் அழித்தும் அடாவடித்தனம் பண்ணுகின்றனர். ஆளும் கட்சியைப் பொறுத்தவரையில் இரண்டு தரப்பினர் உள்ளனர். ஒன்று ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியினர் மற்றையது ஐக்கிய மக்கள் சுதந்திர முன்ணணியினர் ஆவர்.

முதல்வரும் ஏனைய ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி உறுப்பினர்களும் தன்னிச்சையாகவும் ஜனாதிபதியின் கட்சிப் பெயரையும் தவறான முறையில் பயன்படுத்தியும் வந்துள்ளனர். இது தொடர்பாக ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி யாழ்.  மாவட்ட அமைப்பாளரிடம் பலமுறை நான் ஆதாரபூர்வமாகத் தெரியப்படுத்தியிருந்தேன். எனினும், இதுவரை அவர்கள் எதுவித நடவடிக்கையும் எடுக்காமல் அலட்சியமாக நடந்துகொண்டுள்ளனர். இந்த மாநகரசபையில் நடக்கும் ஊழல் தன்னிச்சையான நடவடிக்கைகள் சம்பந்தமாக தாம் கூடிய கவனம் செலுத்தியதால் தனக்கு எதிராக சில விசமிகள் பொய்யான கட்டுக் கதைகளைக் கட்டிவருகின்றனர். பலதடவை மிரட்டல்களும் வந்துள்ளது. இவற்றிற்கெல்லாம் தாம் பயப்படப்போவதில்லை எனவும் ஆனால் அரசாங்கக் கட்சியின் பெயரைப் பயன்படுத்தி தவறான நடவடிக்கைகளில் ஈடுபடுவதை தாம் அனுமதிக்கப்போவதில்லை எனவும் இனிவரும் காலத்தில் நான் நேரடியாக ஜனாதிபதியின் கீழ் உள்ள ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் யாழ். மாவட்ட அமைப்பாளர் அங்கஜன் இராமநாதன் கொள்கைகள், குடாநாட்டு இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புக்களைப் பெற்றுக்கொடுக்கும் வேகம், விவேகம் தமிழ் உணர்வுகள் என்பன சரியாகக் காணப்படுவதால் அவருடன் இணைந்து செயற்பட உள்ளதாகவும் அபிவிருத்தி சம்மந்தமான நடவடிக்கைகளில் தனித்து இயங்கப்போவதாகவும் மாநகரசபையின் மூன்றாவது மாதாந்தப் பொதுக்கூட்டம் முதல்வரின் தனிப்பட்ட தேவைகளுக்காக நிறுத்தப்பட்டதும் இன்றைய கூட்டமும் அவரது படைகளும் சகாக்களும் சேர்ந்து திட்டமிட்டு குழப்பியுள்ளதை தெரிவித்ததுடன் இதைத் தான் வன்மையாகக் கண்டிப்பதாகவும் இது தொடர்பாக மேலதிக நடவடிக்கைகளை தாம் எடுக்கப்போவதாகவும் தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .