2024 மார்ச் 28, வியாழக்கிழமை

வடமராட்சி கிழக்கு மக்களுக்கு 350 நிரந்தர வீடுகள்

Suganthini Ratnam   / 2011 ஏப்ரல் 12 , மு.ப. 06:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வடமராட்சி கிழக்குப் பகுதி மக்களுக்கு அவுஸ்திரேலிய செஞ்சிலுவைச் சங்கத்தின் நிதியுதவியுடன் 350 நிரந்தர வீடுகள் அமைக்கும் பணிகள் எதிர்வரும் மே மாதம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் யாழ். மாவட்டக் கிளை அறிவித்துள்ளது.

வீடுகள் ஒவ்வொன்றும் 3 இலட்சத்து 25 ஆயிரம் ரூபாய் பெறுமதியில் 350 நிரந்தர வீடுகள் அமைக்கப்படவுள்ளது. சுமார் ஒரு வருடகாலத்திற்குள் இவ்வீடுகள் அமைக்கும் பணிகள் நிறைவடையும். இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் யாழ். கிளையினர் இவ்வீட்டுத் திட்டத்தின் முழு நடவடிக்கைகளையும்  மேற்பார்வை செய்யவுள்ளதாக இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் யாழ். மாவட்டக் கிளை குறிப்பிட்டது.

இவ்வாறான வீட்டுத்திட்டங்கள் வன்னிப்பகுதிகளிலும் நடமுறைப்படுத்துவதற்கு நடவடிக்கைள் எடுக்கப்பட்டு வருவதாக இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் யாழ். மாவட்டக் கிளை தெரிவித்தது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X