2024 ஏப்ரல் 17, புதன்கிழமை

கல்வியமைச்சரின் காலில் விழுந்து வணங்க முல்லை. மாணவன் சேதுராகவன் மறுப்பு

Menaka Mookandi   / 2011 செப்டெம்பர் 20 , மு.ப. 07:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் அகில இலங்கையில் இரண்டாவது அதிகூடிய புள்ளிகளைப் (194) பெற்ற முல்லைத்தீவு, நெத்தலியாறு தமிழ் மகா வித்தியாலய மாணவன் பரமேஸ்வரன் சேதுராகவன், கல்வியமைச்சர் பந்துல குணவர்தனவின் காலில் விழுந்து வணங்குவதற்கு மறுப்பு தெரிவித்த சம்பவம் இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது.

வட மாகாணத்தின் கல்வி நிலைகள் மற்றும் பாடசாலைகளின் ஆளுமை விருத்தி தொடர்பாக யாழ் நூலக கேட்போர் கூடத்தில் கல்வியமைச்சர் பந்துல குணவர்தன தலைமையில் நடைபெற்ற மாநாட்டிலேயே இம்சம்பவம் இடம்பெற்றது.

இம்மாநாட்டில் வட மாகாணத்தில் புலமைப் பரிசில் பரீட்சையில் அதிகூடிய புள்ளிகளைப் பெற்ற மாணவர்களான ப.சேதுராகவன், மநிதுர்ஷிகா ரமேஷ், சர்மிகா சர்வானந்தன் ஆகியோர் கௌரவிக்கப்பட்டனர்.

இதன்போது ஏனைய மாணவிகள் இருவரும் அமைச்சரின் காலில் விழுந்து வணங்கிய போதிலும்  சேதுராகவன் மாத்திரம் அமைச்சரின் காலில் விழ மறுப்பு தெரிவித்து அவ்விடத்திலிருந்து அகன்றான்.

அமைச்சரின் காலில் விழுந்து வணங்குமாறு மாணவனின் தந்தை, தாயார் வலியுறுத்தியபோதிலும் அம்மாணவன் பிடிவாதமாக நின்றுகொண்டிருந்தான். இதனால் அமைச்சர் சங்கடத்துக்கு உள்ளானபோதிலும் அவர், தொடர்ந்தும் இந்நிகழ்வில் பங்குபற்றினார்.
 
இது குறித்து அம்மாணவனிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, 'நான் முல்லைத்தீவில் மிகவும் கஷ்ட சூழ்நிலையில் கல்வி கற்றேன். முகாம்களில் இருந்து படித்துள்ளேன். நான் எனது தந்தை, தாயார் ஆசிரியரின் காலில் விழுவேனே தவிர ஏனையோரின் காலில் விழ மாட்டேன்' என கூறினான்.

இவ்வைபவத்தில்,  அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, வட மாகாண ஆளுநர். ஜி.ஏ.சந்திரசிறி, நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரகுமார் மற்றும் யாழ் மாவட்ட பாடசாலைகளின் அதிபர்கள் கல்வித் திணைக்கள அதிகாரிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0

  • Sami Wednesday, 21 September 2011 01:29 PM

    சிறுவனின் மனம் மிகவும் நொந்திருக்க வேண்டும். அதனால் பெரியவர், பெற்றோர் இதை சரியாக கவனிக்க வேண்டும். பந்துல்ல மிகவும் மென்மையான ஆசிரியர். தமிழ் மாணவரின் மன நிலையை அறிந்து கல்வி அமைச்சினால் பாதிக்கப்பட்டவர்களிற்கு உதவி செய்ய வேண்டும். சிங்கள மாணவர்கள் இயற்கையாய் எல்லோர் காலிலும் விழுவர். ஆனால் இது தமிழர்களில் வித்தியாசம்.

    Reply : 0       0

    M.kannan Wednesday, 21 September 2011 02:38 AM

    ஆளுநரின் காலில் விழுந்த முன்னால் அரசாங்க அதிபா் இந்த நிகழ்வில் கலந்து கொண்டிருந்தால் கடைசி காலத்தில் சுயமரியாதை, தன்மானத்தைப்பற்றி அறிந்திருக்கலாம்.வாழ்த்துக்கள் தம்பி.

    Reply : 0       0

    Paran Wednesday, 21 September 2011 03:15 AM

    இதை ஒரு பிரச்னை எண்டு குட்டைய கிளரும் பத்திரிகையாளர்கள் ....
    பாவம் அந்த சிறுவன் ....

    Reply : 0       0

    tvamban Wednesday, 21 September 2011 03:16 AM

    நல்ல மாட்டுக்கு ஒரு சூடு.....

    Reply : 0       0

    anilar Wednesday, 21 September 2011 03:42 AM

    கல்வி அமைச்சர் என்று இல்லை யாரின் காலிலும் விழக்கூடாது. வணக்கத்திற்கு கடவுளைத்தவிர வேறுயாரும் இல்லை. எங்களது முஸ்லிம் அரசியல்வாதி ஒருவர் ஜனாதிபதி மற்றும் ரவிசங்கர் ஆகியோரை அற்ப லாபங்களுங்காக வேண்டி கும்பிட்டதை நான் இங்கு நினைவு படுத்துகின்றேன். அவர்களை விட இந்த சேதுராகவன் தனது கொள்கையில் உறுதியாக இருப்பது பெரும் வியப்பையும், சந்தோசத்தையும் தருகின்றது.

    Reply : 0       0

    Rizard Wednesday, 21 September 2011 04:29 AM

    சபாஸ் ! உனது இந்த வீரச் செயல் மெய் சிலிர்க்கின்றது. நிச்சயம் நீ வாழ்வில் உயர்வாய்.

    Reply : 0       0

    Naleem Wednesday, 21 September 2011 04:38 AM

    இப்படிதான் இருக்க வேண்டும். யாருக்கும் தலை வணங்காத தன் மானமிக்க தமிழனாக வாழ்ந்து காட்ட புறப்பட்டுள்ள இந்த சிறுவனுக்கு வாழ்த்துக்கள்.

    Reply : 0       0

    rozan Wednesday, 21 September 2011 05:27 AM

    அசடு வலிது.....

    Reply : 0       0

    NAKKIRAN Wednesday, 21 September 2011 05:30 AM

    தமிழ் கலாச்சாரத்தின் படி தாய், தந்தை ஆன்மிக குருவின் முன் விழுந்து வணங்கலாம்.

    Reply : 0       0

    thamilmalar Wednesday, 21 September 2011 06:31 AM

    உன் அறிவுக்கும் தெளிவுக்கும் மானத்துக்கும் தமிழர் எங்கள் வாழ்த்துக்கள் தம்பி. உன் முயற்சியை எபோதும் கைவிடாதே.

    Reply : 0       0

    neethan Wednesday, 21 September 2011 06:51 AM

    தாயில் சிறந்த கோவில் இல்லை,தந்தை சொல்மிக்க மந்திரமில்லை. சிறுவயதில் படித்த ஞாபகம்.சேதுராகவனுக்கு அவனது ஆசரியர்கள் இதனை சொல்லி கொடுக்கவில்லையோ?பெற்றோர்கள் சொல்லியும் பிள்ளை அதனை மதிக்கமறுத்தது வருந்ததக்கது.உன் திறமையை வாழ்த்தினாலும்,பணியமறுக்கும் மமதையை கண்டிக்கிறேன்.வாழ்க்கையின் ஆரம்படி இது. ஆன்மிக விழுமியங்களுடன் கூடிய அறிவினை பெற யாசிக்கிறேன்.

    Reply : 0       0

    sahabdeen Wednesday, 21 September 2011 08:47 AM

    அந்த பையனுக்கு இப்படி காலில் விழுந்து பழக்கம் இல்லை போல . ஏன் இனவாதம்??? இந்துக்களும் பௌத்தர்களும் பெரியோர்களின் காலில் விழுந்து ஆசீர்வாதம் பெற்றுக்கொள்வது சாதாரணம் தானே??? ஏன் அந்த குழந்தையின் எதிர் காலத்தை மன்னாக்கிறிங்க??? இந்த மாதிரி அறிவு கொண்ட மாணவன் நமது நாட்டுக்கு மிகவும் தேவை...

    Reply : 0       0

    Shoot Wednesday, 21 September 2011 12:46 AM

    இது என்ன ஒரு சர்வதேச pirachinaiyaa ?

    Reply : 0       0

    THIVAAN Wednesday, 21 September 2011 01:36 PM

    கற்க கசடற , கற்றவை , கற்றபின் , நிற்க , அதற்கு , தக.. எனக்கு மிகவும் பிடித்த திருக்குறள் , தாய் ,தந்தை , ஆன்மிக குரூ .

    Reply : 0       0

    anilar Wednesday, 21 September 2011 03:04 PM

    "தமிழன் என்டு சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா"

    இல்லை இல்லை

    "சேதுராகவன் என்டு சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா"


    இல்லை இல்லை

    "சேதுராகவன் என்டு சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா"')">Reply :
    0       0

    islam Wednesday, 21 September 2011 03:51 PM

    வாழ்த்துக்கள் நலம்

    Reply : 0       0

    Mohammed Hafeel Wednesday, 21 September 2011 03:53 PM

    மரியாதையை கொடு... ஆனால் காலில் விழ வேண்டிய அவசியம் என்ன? தம்பி, நீ செய்தது மிகச்சரியானது...

    Reply : 0       0

    ram Wednesday, 21 September 2011 04:49 PM

    கல்விக்கு உயிரளிப்பவனாக மட்டும் இரு.
    வாழ்த்துக்கள் தம்பி !!

    Reply : 0       0

    VICTOR Wednesday, 21 September 2011 08:22 PM

    நீதானடா உலகத்திலே முதல் தமிழன் நீ. நன்றாக படித்து இந்த தமிழர்களை வழிநடத்தடா என் கண்ணா .

    அன்பு அண்ணன் தமிழன்.

    Reply : 0       0

    Arivaalan Wednesday, 21 September 2011 08:30 PM

    தெளிவான தம்பி. சபாஷ்!

    Reply : 0       0

    Ossan Salam - Doha Wednesday, 21 September 2011 09:09 PM

    சிங்கள, தமிழ் மாணவர்கள் பொதுவாக தமது மூத்தவர்களுக்கு காலில் விழுந்து வணக்கம் செலுத்தும் ஒரு பாரம்பரியம் உண்டு. ஆனால் எமது முஸ்லிம் மாணவர்கள் யார் காலிலும் விழ நாம் அனுமதிக்க மாட்டோம். காரணம் குப்பைகளையும் ஊத்தைகளையும் சுமந்திருக்கும் மனிதன் முன் காலில் விழ எமக்கு மத நெறியின் பிரகாரம் தடை விதிக்கப்பட்டுள்ளது. கைலாகு கொடுத்து தமது மரியாதையை யாருக்கும் தெரிவிக்கலாம். இங்கு அமைச்சர் இந்த விடயத்தை பெரிது படுத்தியதாக தெரியவில்லை. மற்றவரின் காலில் விழ வேண்டிய தேவை யாருக்கும் kidayyaathu.

    Reply : 0       0

    xlntgson Wednesday, 21 September 2011 09:12 PM

    இதில் பாராட்ட ஒன்றும் இல்லை, முற்றிப்போன அல்லாத பிஞ்சிலே பழுத்த செயல் என்றே நான் நினைக்கின்றேன். இருந்த போதிலும் ஒன்றை நினைவு கூறத்தான் வேண்டும்:

    காலில் விழுவதைத் தடை செய்யவேண்டும். ராஜீவ் காந்தி காலில் விழுந்தது தெரியும் தானே?

    Reply : 0       0

    Soma Poopal Thursday, 22 September 2011 06:53 PM

    இந்த செய்தியை இப்படி பெருசுபடுத்துவது , பையனின் எதிர்காலத்துக்கு நல்லது இல்ல .

    Reply : 0       0

    Atheek Saturday, 24 September 2011 02:09 PM

    சேது தம்பி... உன் எதிர்கால வாழ்க்கை சிறப்பாக வாழ்த்துக்கள் .... முகாமில் இருந்து படித்து இவ்வளவு பெரிய இடத்தை அடைவது மற்றோருக்கு சிறந்த எடுத்துக் காட்டு... தமிழ் பண்பாட்டின் படி காலில் விழுந்து வணகுவது இயல்பு... மாணவன் கூறியதும் சரி... தாய் தந்தை தன் ஆசான் ஆகியோர் தனக்கு உதவியதே அவன் கூறுகின்றான்... இதை இனப் பிரச்சினை ஆக்காதீர்கள்... எம் நாட்டிற்கு இது போன்ற மாணவர்கள் தேவை...

    Reply : 0       0

    Manithan Tuesday, 20 September 2011 09:10 PM

    தம்பி இதனால்தான் நீ முதலிடத்தில் வந்தாயோ , யார் காலிலும் விழாதே, தன் மானச் சிங்கமாய் வாழ வாழ்த்துக்கள்.

    Reply : 0       0

    Hot water Tuesday, 20 September 2011 07:38 PM

    தந்தை பெரியார் வழிநடக்கும் சுயமாரியதை சிந்தனை கொண்ட மாணவன் போல.

    Reply : 0       0

    alm faizar Tuesday, 20 September 2011 07:45 PM

    குட் பையா நல்ல செயல் யாருக்கும் அடிமையாகாதே ........

    Reply : 0       0

    ruban Tuesday, 20 September 2011 07:56 PM

    he is tamil. good

    Reply : 0       0

    Nirmalalraj Tuesday, 20 September 2011 08:03 PM

    பலர் காலில் விழுவது போலியாக. மரியாதை மனத்தில்இருக்க வேண்டும். காலில் விழுந்து வணங்குவதா வேண்டாமா என்று அவரவர்கள் தீர்மானிக்க வேண்டும். மற்றவர்கள் வற்புறுத்தக்கூடாது.

    Reply : 0       0

    uoorann Tuesday, 20 September 2011 08:05 PM

    தம்பி பெரிய சமூகத்தால பாதிக்கபட்டவராக்கும்

    Reply : 0       0

    ilakijan Tuesday, 20 September 2011 08:06 PM

    நல்ல செருப்படி. வெட்கம் இல்லாதவர்களுக்கு இது உரைக்காது .

    Reply : 0       0

    AJ Tuesday, 20 September 2011 08:30 PM

    That's the GREAT TAMILS.

    Reply : 0       0

    aj Tuesday, 20 September 2011 08:38 PM

    இதில் மட்டும் வற்புறுத்தவில்லை எல்லா விடயங்களிலும் தமிழர்களை இவர்கள் வற்புறுத்தல். வெட்கம் வெட்கம்.

    Reply : 0       0

    ramees Tuesday, 20 September 2011 08:44 PM

    தம்பி நீங்க உங்க பெற்றோருடைய காலிலும் வில வேண்டாம். படைத்த இறைவன் மட்டுமே அதற்கு போதுமானவன்.உனது மன நம்பிக்கை உன்னை உயர்த்த வேண்டுமன்று நான் பிரார்த்திக்கிறேன்.

    Reply : 0       0

    siraj Tuesday, 20 September 2011 08:53 PM

    தம்பிக்கு நன்றி உன் வேலை பாராட்டக்கூடியது. யாரின் காலிலும் விழும் தேவை என்ன? தப்புக்கு இடம் கொடுக்காதே வாழ்த்துக்கள் தம்பிக்கு.

    Reply : 0       0

    suwathi Tuesday, 20 September 2011 09:07 PM

    நியாயத்தின் பொருட்டு வெளிப்படையாக ஒருவருடன் விவாதிப்பது சிறப்பாகும். உண்மையான தமிழன்!

    Reply : 0       0

    M.I.MUZAWWIR ZIYAN Tuesday, 20 September 2011 07:25 PM

    சபாஷ்..........!!!!!!

    Reply : 0       0

    xlntgson Tuesday, 20 September 2011 09:12 PM

    மரியாதை நிமித்தம் காலில் விழலாம், விழாமல் இருக்கலாம், இது கீழைத்தேய மரியாதை என்றாலும் சிரஷ்டாங்கம் என்று கருதி முஸ்லிம்கள் செய்வதில்லை! சிரவணக்கம் வேறு! பொலீஸ்காரர்கள் காலில் விழுந்து வழக்குப்போடாதீர்கள் என்றால் விடுவரா, கடன்காரன் காலில் விழுந்தால் கடன் கொடுக்கவேண்டியது இல்லையா? உயிர்பிச்சை கேட்டாலும் நடவாது.

    Reply : 0       0

    suwathi Tuesday, 20 September 2011 09:20 PM

    நியாயத்தின் பொருட்டு வெளிப்படையாக ஒருவருடன் விவாதிப்பது சிறப்பாகும்.உண்மையான தமிழன் வாழ்த்துக்கள்.

    Reply : 0       0

    thamilan suya Tuesday, 20 September 2011 09:43 PM

    தம்பி நீ தமிழனடா

    Reply : 0       0

    chicharito Tuesday, 20 September 2011 10:21 PM

    singa kkutti.

    Reply : 0       0

    chicharito Tuesday, 20 September 2011 10:24 PM

    முன்னால் முன்னால் முன்னால் முன்னால் வாடா, உன்னால் முடியும் உன்னால் முடியும் தோழா.

    Reply : 0       0

    rizlan Tuesday, 20 September 2011 10:25 PM

    நாம் யாருக்கும் அடி பணியக் கூடாது .

    Reply : 0       0

    Mushtaq_ntr Tuesday, 20 September 2011 11:18 PM

    பாவம் அமைச்சர்.

    Reply : 0       0

    Wijay Tuesday, 20 September 2011 11:44 PM

    தேவையற்ற கருத்துக்களையும் விபரீத சிந்தனைகளையும் பதித்து ஆண்ட சிறுவனின் வாழ்க்கையை கேள்விக்குறியாக்காதீர்கள். அவன் ஏன் காலில் விழவில்லை என்று அவனுக்கு மட்டும்தான் தெரியும். திரிவுபடுத்தி கூறும் கருத்துக்கள் அந்த சிறுவனியன் எதிர்காலத்தை பாதிக்க கூடும். சிந்தித்து செயல்படுங்கள் மக்களே.

    Reply : 0       0

    rozan Wednesday, 21 September 2011 12:00 AM

    சபாஸ் டா கண்ணா?

    Reply : 0       0

    kst Wednesday, 21 September 2011 12:08 AM

    கல்வி அமைச்சருக்கு எப்படியிருந்தாலும் பக்கத்தில் நின்றிருந்த தமிழ் அமைச்சருக்கு எப்படி இருந்திருக்கும் என்பதை யாராவது பார்த்தால் அறியத் தாருங்கள்.

    Reply : 0       0

    n sivaraman Wednesday, 21 September 2011 12:35 AM

    மிக நன்று வாழ்த்துக்கள்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .