2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

'225 எம்.பி.க்களையும் கைதுசெய்ய வேண்டும்'

Kanagaraj   / 2013 ஜூலை 30 , பி.ப. 08:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா

இலங்கையிலுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் 225 பேரையும் கைதுசெய்து  சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு சர்வதேச நாடு ஒன்று முன்வர வேண்டுமென தான் கோரிக்கை விடுப்பதாக  தமிழர் விடுதலைக் கூட்டணியின் முன்னாள் மாநகர சபை உறுப்பினர் தங்க முகுந்தன் நேற்று செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.

யாழ். ஊடக அமையத்தில் நேற்று நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவா மேற்கண்டவாறு கூறினாhர்.
அவர் அங்கு மேலும் கூறுகையில், நாடாளுமன்ற உறுப்பினர்கள் 225 பேரையும் உடனடியாக கைதுசெய்ய வேண்டுமென்று எவரும் கூறாததை நான் கூறுகின்றேன்.

அமெரிக்க ஜனாதிபதியினால் சதாம் உசைன் கைதுசெய்ய முடியுமென்றால், இலங்கையில் மக்கள் கொல்லப்டுகின்றார்கள் அந்தவகையில், இங்கிருப்பவர்களை ஏன் கைதுசெய்து சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்த முடியாது என்றும் அவர் கேள்வியெழுப்பினார்.

அத்துடன், தமிழ் மக்கள் கூட்டமைப்பினரை மக்கள் நம்பி இருக்கின்றார்கள். இதுவரை 4 வருடகாலமாக இந்த கட்சி மற்றும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமிழ் மக்களுக்கு என்ன செய்தார்கள் என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

தற்போது, நடைபெறவுள்ள மாகாண சபை தேர்தல் நாடாளுமன்றத்தினை விட பெரிதல்ல, இவர்கள் எல்லோரும் மாகாண சபையினை நாடாளுமன்றம்  போன்று எடுத்துக் காட்டுகின்றார்கள்;. நாடாளுமன்றம் ஜனாதிபதி நினைத்தவுடன் கலைக்கக் கூடியது என்றும் அவர் தெரிவித்தார்.

26 வருடங்களுக்கு முன்னர் உருவாக்கப்பட்ட மாகாண சபை ஒரு வருடமும் ஒரு மாதமும் ஆட்சியில் இருந்தது. அதன் பின்னர் மாகாண சபை அற்றுப் போய் தற்போது, வடக்கு, கிழக்கு என பிரிந்துள்ளது என்றார்.

அதேவேளை, நான் மக்கள் சார்பாக கதைக்கின்றேனே தவிர எந்த கட்சி சார்பாக  கதைக்கவில்லை. நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுதந்திரமாக செல்கின்றார்கள் என்றால், ஏன் அப்பாவி இளைஞர்கள் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளார்கள். உடனடியாக தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ள இளைஞர்கள் விடுதலை செய்ய வேண்டும்.

நான் அப்பாவித் பொது மக்கள் சார்பில் மட்டுமன்றி,  தமிழ் சிங்கள முஸ்லிம் மக்கள் அத்தனை பேரையும் பற்றி சிந்திக்கின்றேன். அடிமட்டத்தில் உள்ள மக்களின் வாழ்க்கைகள்  உயர்த்த வேண்டுமென கேட்கின்றேன் என்றார்.

அடிமட்டட  வாழ்க்கையில் இருப்பவர்கள், இவர்களை நம்பி, வாக்குகளை அளிக்கின்றார்கள்.  வாக்களிப்பதற்கு நியாயம் இருக்கின்றது. ஜனாதிபதி தேர்தலில் உங்கள் வாக்குகளை பயன்படுத்தினீர்களா யாராவது? உங்கள்  உள்ளத்தினை தொட்டு சொல்லுங்கள் வாக்குகளை சரியாக பயன்படுத்தினீர்களா? நாட்டின் ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கு வாக்குகளை பயன்படுத்த தவறிவிட்டு, சாதாரண மாகாண சபைக்கு வாக்குகளை பயன்படுத்த வருகின்றீர்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.

அரசியல் தலைவர்கள் சொல்லி இந்த மக்களுக்கு தெரிய வேண்டிய அவசியம் இல்லை. மக்கள் மந்தைகளாகவும்,  மோட்டு கூட்டங்களாக இருக்கின்றார்கள் என்பதை உணர்த்துவதற்கு தான் போட்டியிடுகின்றார்கள்.  வடமாகாண சபை தேர்தல் வரப்போகிறதென்றால் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு இது உண்மையில் அரசியல் சட்டத்திற்கு முரணானது.

நியாயம் என்ற ரீதியில் முதன்மை வேட்பாளராகிய எங்களின் நீதிபதியிடம் மன்றாட்டமாக கேட்டுக் கொள்வது. மக்களை காக்க வேண்டிய பொறுப்பு உங்களிடம் இருக்கின்றது.

தமிழர் விடுதலை கூட்டணிக்கு எதிராக இந்த பணிகளை செய்யவில்லை.  நாங்கள் தமிழரவு கட்சி தந்தை செல்வாவின் சின்னம் நியாயமான முறையில் பிரயோகிக்க வேண்டும் என்ற நியாயத்தினை கூறுகின்றேன். மாகாண சபை தேர்தலுக்கு  வாக்கு  அளிப்பதற்கும், வாக்குரிமைகளை பயன்படுத்துவதற்கும் மக்கள் சிந்திக்கவேண்டும் என்றார்.

You May Also Like

  Comments - 0

  • vaarisu. Wednesday, 31 July 2013 03:38 PM

    இப்போ எங்களை என்னதான் செய்ய சொல்லுறீங்கோ...???!!!

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .