2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

நுரைச்சோலை அனல் மின்நிலைய தீ விபத்து;முக்கோண விசாரணை ஆரம்பம்

Menaka Mookandi   / 2010 ஒக்டோபர் 25 , மு.ப. 07:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(சந்துன் ஏ.ஜயசேகர)

நுரைச்சோலை அனல் மின்நிலையத்தில் நேற்று இடம்பெற்ற திடீர் தீ விபத்து குறித்து முக்கோண விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.

குறித்த தீ விபத்து தொடர்பில் விளக்கமளிக்கும் விஷேட செய்தியாளர் மாநாடு கொழும்பில் இன்று காலை இடம்பெற்ற போது அதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இந்த விபத்து காரணமாக அனல் மின் நிலையத்தின் நிர்மாணப் பணிகளில் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என்றும் ஏற்கனவே திட்டமிட்ட வகையில் எதிர்வரும் 2011ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் குறித்த மின் நிலையத்தின் முதற்கட்டப் பணிகள் நிறைவடையும் என எதிர்ப்பார்க்கப்படுவதாகவும் அமைச்சர் கூறினார்.

தீ விபத்து காரணமாக ஏற்பட்ட நட்டத்தினை குறித்த கட்டுமாணப் பணிகளில் ஈடுபட்டு வரும் சீன நிறுவனம் பொறுப்பேற்றுள்ளது. இதனால் குறித்த தீ விபத்து காரணமான அரசாங்கத்துக்கு எவ்வித நட்டமும் ஏற்படவில்லை என்றும அமைச்சர் மேலும் சுட்டிக்காட்டினார். Pix by :- Pradeep Dhilrukshana


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X