2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

வில்பத்து கற்றாழை குறித்து விசாரணை

Editorial   / 2020 மார்ச் 02 , பி.ப. 04:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

வில்பத்து பிரதேசத்துக்கு அருகிலுள்ள ராஜாங்கனை பகுதியில், பாரியளவில் உற்பத்தி செய்யப்படும்  கற்றாழை குறித்து, மத்திய சுற்றாடல் அதிகார சபை, விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

இதற்கமைய, குறித்த பகுதி வில்பத்து வலயத்துக்குரியதாக என்பது தொடர்பில் ஆராய்ந்து வருவதாக, மத்திய சுற்றாடல் அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம்  ஹேமந்த ஜயசிங்க தெரிவித்தார்.

கற்றாழை உற்பத்திக்கு, மத்திய சுற்றாடல் அதிகார சபையின் வடமத்திய மாகாண அலுவலகம் அனுமதி வழங்கியுள்ளதுடன், இது குறித்து மத்திய சுற்றாடல் அதிகார சபையின் பிரதான அலுவலகத்துக்கு அறியத்தரவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த விடயம் குறித்து ஆராய்வதற்காக, விசேட குழுவொன்றை, ராஜாங்கனை பகுதிக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக, கொழும்பிலுள்ள மத்திய சுற்றாடல் அதிகார சபையின் பிரதான அலுவலகம் தெரிவித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X