2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

கொழும்பில் Huawei பிரதான சேவை மையம்

Gavitha   / 2016 டிசெம்பர் 20 , பி.ப. 07:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

Huawei, தனது முதலாவது சேவை மையத்தை கொழும்பு 04 பகுதியில் திறந்து வைத்துள்ளது.Huawei முதன்முதலாக அறிமுகப்படுத்தியுள்ள சேவை மையமாக இது மாறியுள்ளதுடன், Huawei வாடிக்கையாளர்களுக்கு விற்பனைக்குப் பின்னரான ஒட்டுமொத்த சேவைகளையும் வழங்குவதில் இது கவனம் செலுத்தும். இப்புதியச் சேவை மையமானது, 9/1/2, புகையிரத நிலைய வீதி, கொழும்பு 04 என்ற முகவரியில் அமைந்துள்ளது.Huawei Device உள்நாட்டு தலைமை அதிகாரியான ஹென்றி லியு, பொது முகாமையாளரான கல்ப பெரேரா, சிங்கர் ஸ்ரீ லங்கா பிஎல்சி நிறுவனத்தின் சந்தைப்படுத்தல் பணிப்பாளரான குமார் சமரசிங்க, விற்பனை மற்றும் வர்த்தகத்துறைப் பணிப்பாளரான மகேஷ் விஜேவர்த்தன மற்றும் தொழிற்பாடுகளுக்கான பணிப்பாளரான சந்தன சமரசிங்க ஆகியோர் இந்தச் சேவை மையத்தின் திறப்பு விழா நிகழ்வில் கலந்து சிறப்பித்தனர்.

திறன்பேசி மற்றும் tablet சாதனங்களின் திருத்த வேலைகள், பேணல் மற்றும் உத்தரவாத சேவைகள் போன்ற சேவைகளை Huawei சேவை மையம் வழங்கவுள்ளது. Huawei தலைமையலுவலகத்தின் நேரடி வழிகாட்டலின் கீழ் விரிவான பயிற்சியைப் பெற்று, உரிய தகுதியையும், தகைமையையும் கொண்ட பணியாளர்கள் மூலமாக மிகச் சிறந்த சேவைகளையும், ஆலோசனைகளையும் வாடிக்கையாளர்கள் இங்கே பெற்றுக்கொள்ள முடியும்.

Huawei வர்த்தகநாமம் சந்தையில் மேலும் விஸ்தரிப்படைந்து வருகின்ற நிலையில் வாடிக்கையாளர்களின் பல்வேறுபட்ட தேவைகளையும் பூர்த்திசெய்ய உதவும் வகையில் பேணற்சேவை உட்கட்டமைப்பை மேம்படுத்துவதே Huaweiஇன் நோக்கமாகும்.சேவை வழங்கல் விஸ்தரிப்பு தொடர்பில் Huawei Device உள்நாட்டு தலைமை அதிகாரியான ஹென்றி லியு, கருத்து தெரிவிக்கையில், “தொடர்ச்சியாக வளர்ச்சிகண்டு வருகின்ற ஓர் நாடான இலங்கையை, பிராந்தியத்தில் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு சந்தையாக Huawei இனங்கண்டுள்ளது” என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .