2024 மார்ச் 28, வியாழக்கிழமை

2010 முதலாம் அரையாண்டில் அதிக இலாபமீட்டிய ஜனசக்தி காப்புறுதி

Menaka Mookandi   / 2010 செப்டெம்பர் 07 , மு.ப. 10:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இலங்கையிலுள்ள காப்புறுதி நிறுவனங்களின் மத்தியில் மிகவும் இலாபமீட்டியுள்ள காப்புறுதி நிறுவனமாக ஜனசக்தி காப்புறுதி நிறுவனம் திகழ்கின்றது. 2010இன் முதல் அரையாண்டில் வரிக்குப் பிந்திய இலாபமாக ரூ. 145.4 மில்லியனை ஜனசக்தி பதிவு செய்துள்ளது. இது 19 போட்டியாளர்கள் மத்தியில் பெறப்பட்ட சாதனையாகும்.

ஜனசக்தி காப்புறுதியின் முகாமைத்துவப் பணிப்பாளர் பிரகாஷ் ஸ்காப்டர், "அதிகளவிலான நிறுவனங்களுக்கிடையிலான போட்டி மற்றும் சவாலான பொருளாதார நிலைமைக்கு மத்தியில் இந்த உயர் இலாபத்தை பெற்றுக் கொண்டுள்ளோம்" எனத் தெரிவித்தார்.

"பலதரப்பட்ட காப்புறுதி உற்பத்திகள் மற்றும் சேவைகளை, சமப்படுத்த முடியாத நன்மைகளுடன் காப்பீட்டாளர்களுக்கு வழங்கும் நிறுவனத்தின் தந்திரோபாயத்தின் காரணமாக இது சாத்தியமானது. 2010இன் முதலாம் அரையாண்டில் ரூ. 1.6 பில்லியனும் 2009இல் ரூ. 2.6 பில்லியனுமாக கொடுத்துத் தீர்க்கப்பட்ட இழப்பீடுகளுடன், எமது தற்போதைய வாடிக்கையாளர்களை தக்கவைத்துக் கொள்ள பிரத்தியேக சேவை தரங்கள் உதவின.

முந்தைய வருடத்தின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் மொத்த இழப்பீடு கோரிக்கைகள் ரூ. 413 மில்லியனால் அதிகரித்துள்ளது" எனவும் அவர் கூறினார். தொடர்ந்து கருத்து தெரிவித்த முகாமைத்துவப் பணிப்பாளர், "2009இன் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில், மிகவும் அதிக இலாபமீட்டிய காப்புறுதி நிறுவனமாக ஜனசக்தி காப்புறுதி நிறுவனம் காணப்பட்டாலும், நிறுவனம் வரிக்குப் பிந்திய இலாபத்தில் ஒரு சரிவை கொண்டுள்ளது.

400 இற்கும் அதிகமான இழப்பீட்டு கோரிக்கைகளை பெற்றுக்கொண்ட அண்மைய வெள்ளப்பெருக்கு உள்ளடங்களான இயற்கை அனர்த்த பிரிவின் கீழ் அதிகப்படியான இழப்பீட்டுக் கோரிக்கைகளின் பெறுபேறே இதுவாகும்". "எமது அனுபவம் பொதுமக்கள் மத்தியில் நம்பிக்கையை கட்டியெழுப்ப உதவின. காப்புறுதி நிறுவனங்களுக்கு மத்தியில் மிகவும் அதிகளவிலான மூலதனத்தைக் கொண்டுள்ள நிறுவனமாக ஜனசக்தி காப்புறுதி உள்ளது.

இது சட்டப்படி தேவையான மூலதனத்தைவிட 7.5 மடங்கு அதிகமாக, ரூ. 1.49 பில்லியனைக் கொண்டுள்ளது. அரச பிணைகளில் உள்ள ரூ. 4.1 பில்லியனுடன், ரூ. 11 பில்லியன் சொத்துக்களை நிறுவனம் கொண்டுள்ளதுடன், அரச காப்புறுதி நிறுவனத்தை கையகப்படுத்திக் கொண்ட ஒரே காப்புறுதியாளராகவும் திகழ்கின்றது. இதேவேளை, 100இற்கும் அதிகமான நாடளாவிய பரந்த கிளை வலையமைப்பையும் ஜனசக்தி கொண்டுள்ளது" என அவர் மேலும் தெரிவித்தார்.

விற்பனை மற்றும் சந்தைப்படுத்தலுக்கான பொது முகாமையாளர் ரவி லியனகே, "2010ஆம் ஆண்டில் எமது நோக்கமாக எமது பிரபலமான குறியீடுகளான ஜனசக்தி ஃபுல் ஒப்- வன், ஜனசக்தி லைஃப் அன்லிமிட்டட், ஜனசக்தி ஆவரணய போன்றவற்றின் நன்மைகளை விஸ்தரிப்பதுடன், தற்போதைய பொருளாதார மற்றும் நுகர்வோர் தெரிவுகளுக்கு அமைய பலதரப்பட்ட புத்தாக்கமான உற்பத்திகளை அறிமுகப்படுத்துவதும் காணப்படும்.

வேகமான சேவை வழங்கல் மற்றும் எமது வாடிக்கையாளர்களுக்கு சிறப்பாக சேவையாற்ற  விற்பனை அணியை பலப்படுத்தல் ஆகியவற்றுக்காக தொழில்நுட்பத்தின் பிரயோகத்தை ஜனசக்தி மேலும் விஸ்தரிக்கும்" எனக் கூறினார்.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X