2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

சிறப்பாக செயற்பட்ட ஜனசக்தி ஆளணியினருக்கு 'ஜெட்லைனர்' கப்பலில் குதூகலமான உபசாரம்

Suganthini Ratnam   / 2011 ஏப்ரல் 05 , மு.ப. 08:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

ஜனசக்தி இன்சூரன்ஸ் நிறுவனம் சிறப்பாக செயலாற்றிய தமது விற்பனை ஆளணியினர் 250 பேருக்காக   இலங்கை கடற்படையின்  'ஜெட்லைனர்'  கப்பலின் திறந்தவெளிச் சூழலில் அண்மையில் ஏற்பாடு செய்த விருந்துபசார நிகழ்வானது, வாழ்க்கையில் ஒருமுறை மாத்திரம் கிடைக்கக்கூடிய மறக்கமுடியாத உபசாரமாக அமைந்திருந்தது.

அபூர்வமான செயற்பாடுகளை மேற்கொண்டவர்களென அடையாளம் காணப்பட்டுள்ள பொது மற்றும் ஆயுள் காப்புறுதிப் பிரிவுகளைச் சேர்ந்த விற்பனை அணியினரே இந்நிகழ்வில் பங்கேற்றனர்.

மிகச் சிறந்த செயற்பாட்டாளர்களான ஆண், பெண் இருபாலாரும் வடக்கு, கிழக்கு மாகாணங்கள் உட்பட நாட்டின் அனைத்துப் பாகங்களிலும் இருந்து இந்நிகழ்வுக்காக வருகை தந்திருந்ததுடன் நட்சத்திரங்கள் நிறைந்திருந்த வானத்தின் கீழ் ஒரு மாலைப் பொழுதினை சந்தோசமாகக் கழித்தனர். இவர்களுள் அநேகமானவர்களுக்கு பயணிகள் கப்பல் ஒன்றிலான முதலாவது அனுபவமாக இது அமைந்திருந்தது. கப்பலில் அவர்கள் சந்தோசமான உணர்வை வெளிப்படுத்தியதை உணர்ந்து கொள்ளக் கூடியதாக இருந்தது.  கப்பல் கொழும்பு துறைமுகத்திற்கு சற்று வெளியே பயணித்த வேளையிலும்  கொழும்பு வான்பரப்பில் ஆச்சரியமிக்க மாற்றங்கள் ஏற்பட்டபோதும் இரவில் அழகாக ஒளிவீசத் தொடங்கிய நேரத்திலும் அவர்கள் தமது கமராக்களில் அவற்றை புகைப்படங்களாக பதிவு செய்து கொண்டனர். உண்மையில் அந்தபுறச் சூழலில் காணப்பட்ட அனுபவிக்கக் கூடிய விடயங்களை விடவும் அதிகமாக அவர்கள் அனுபவித்தனர்.

ஜனசக்தி இன்சூரன்ஸ் நிறுவனத்தின் சந்தைப்படுத்தல் பிரிவுத் தலைவர் பெடி வீரசேகர கூறுகையில், இவ்வாறான அனுபவம் ஒன்றினை வழங்குவதன் மூலம் சிறப்பாக செயற்படும் ஊழியர்களுக்கு வெகுமதியளிப்பதையிட்டு ஜனசக்தி நிறுவனம் மிகவும் மகிழ்ச்சியடைகின்றது என்றார்.

அவர் மேலும் கூறுகையில்,

'இவ்வாறான வழிமுறைகள் எப்போதும் மிகவும் வெற்றிகரமான ஊக்குவிப்பு முறைகளாக நிரூபிக்கப்பட்டுள்ளன. வழமையான வீட்டு மற்றும் வேலைத்தள சூழலில் இருந்தும் விடுபட்ட வகையிலமைந்த இந்தச் சூழ்நிலையானது பாரிய மாற்றமொன்றை தோற்றுவிக்கின்றது. அத்துடன் இயற்கையான இடமொன்றில் ஓய்வெடுப்பதற்கான வாய்ப்பையும் வழங்குகின்றது. இந்த நிகழ்வில் ஏற்பட்டிருந்த பிணைப்பானது மிகவும் உயர்ந்ததொன்றாகும். நிறுவனத்தின் சிரேஷ்ட முகாமைத்துவ அதிகாரிகளும் பிரசன்னமாகியிருந்த நிலையில், நட்புறவுமிக்க பொதுவான சூழலொன்றில் பரஸ்பரம் எண்ணங்களை சிறப்பாக பரிமாறிக் கொள்ளவும் முடிந்தது'' என்று குறிப்பிட்டார்.

இவ்வாறான நிகழ்வுகள் உண்மையில், வழமையாக நாம் நடத்தும் வருடாந்த மற்றும் வருடத்தின் நடுப்பகுதி விருது வழங்கல் வைபவங்களுக்கு மேலதிகமானவையாகும். உண்மையாகவே ஒரு பெரிய குடும்பமாக திகழும் ஜனசக்தியில் தாமும் ஒரு உறுப்பினர் என்ற உணர்வை விற்பனை அணியினருக்கு ஏற்படுத்தும் முயற்சியாக இந்நிகழ்வுகள் அமைகின்றன. அதேநேரம், 2011 நிதியாண்டின் முதலாவது காலாண்டுக்கான ஊக்குவிப்புத் திட்டத்தை நாம் மிக அண்மையில் பூர்த்தி செய்துள்ளோம். இதன்படி, மிகச் சிறப்பாக செயலாற்றிய ஊழியர்கள் அனைத்துச் செலவுகளும் நிறுவனத்தினால் வழங்கப்படும் வகையிலமைந்த சுற்றுப் பயணம் ஒன்றினை மேற்கொண்டு சிங்கப்பூர், மலேசியா ஆகிய நாடுகளுக்கு ஒரே தடவையில் செல்லவுள்ளனர்'' என்று அவர் மேலும் தெரிவித்தார்.

ஜனசக்தி இன்சூரன்ஸ் நிறுவனம் கடந்த வருடங்களிலும் தனது விருதுபெற்ற விற்பனைப் பிரிவினருக்கு கப்பலிலான அனுபவங்களையும் அத்துடன் சிங்கப்பூர், ஐக்கிய இராச்சியம், பாங்கொக், சீனா, துபாய், மலேசியா போன்ற பல நாடுகளுக்கு அனைத்துச் செலவுகளும் நிறுவனத்தால் பொறுப்பேற்கப்பட்ட விடுமுறைகால பயணங்களையும்  வெகுமதியாக வழங்கியது. இதற்கு மேலதிகமாக உள்நாட்டிலுள்ள பல்வேறு இடங்களுக்குச் செல்வதற்கும் ஜனசக்தி  அவர்களுக்கு வெகுமதி அளித்திருந்தது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .