2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

NIBM நிறுவனத்தில் டப்ளின் பல்கலைக்கழக பட்டப் பின் படிப்பு நெறிகள்

Super User   / 2011 மார்ச் 29 , பி.ப. 05:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

தேசிய வியாபார முகாமைத்துவ நிறுவனம் (National Institute of Business Management – NIBM) அயர்லாந்து டப்ளின் தேசிய பல்கலைக்கழகத்துடன் இணைந்து (National University of Ireland, University College Dublin) நடத்தும் முகாமைத்துவம் மற்றும் மனிதவள மேலாண்மை பட்டப் பின் படிப்பு நெறிகளுக்கான ஒப்பந்தம் வரும் சில தினங்களுக்குள் கையெழுத்திடப்படவுள்ளது.

1996 ஆம் ஆண்டிலிருந்து NIBM  நிறுவனம் டப்ளின் பல்கலைக்கழகத்துடன் இணைந்து இரு முகாமைத்துவம் மற்றும் தகவல் தொழில்நுட்பப் பட்டப்படிப்பு நெறிகளை செயற்படுத்துவதோடு, 2009 ஆம் ஆண்டில் அதையnhட்டிய இரு பட்டப்படிப்புகளைப் பற்றி கலந்துரையாடல்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இது தொடர்பாக இளைஞர் விவகார மற்றும் திறன்கள் அபிவிருத்தி அமைச்சர் டலஸ் அழகப்பெரும டப்ளின் பல்கலைக்கழக முகாமைத்துவம் மற்றும் தகவல் தொழில்நுட்பவியல் பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் எச்.சீ. ஹரிசனோடு நடந்த கலந்துரையாடலின் போது இப்பட்டப்படிப்பு நடைபெறுவதைப் பற்றி இணக்கப்பாட்டிற்கு வந்துள்ளனர்.

அதற்குரிய ஒப்பந்தத்தில் இம் மாத இறுதியில் கையெப்பமிடுவதற்கான ஏற்பாடுகள் எடுத்துள்ளனர் என்றும்  NIBM நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி ஈ.ஏ. வீரசிங்க தெரிவித்துள்ளார்.

 இந்த ஒப்பந்தம் மூலம் டப்லின் பல்கலைக்கழகப் பேராசிரியர்களின் போதனைகள் மற்றும் அனுபவ அறிவுகள் இலங்கை மாணவர்களுக்கு கிடைக்கும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

1979 இல் NIBM நிறுவனம் தகவல் தொழில்நுட்பவியல் டிப்ளோமா பாடநெறி ஒன்றினை ஆரம்பித்ததோடு, அதன் பின் 1996 ஆம் ஆண்டிலிருந்து டப்ளின் பல்கலைக்கழகத்துடன் இணைந்து முகாமைத்துவம் மற்றும் தகவல் தொழில்நுட்பவியல் பட்டப்படிப்பு பரீட்சையினை ஆரம்பித்துள்ளனர்.

'நம் நாட்டிலிருந்து டப்ளின் பல்கலைக்கழகம் மூலம் முகாமைத்துவம் மற்றும் மனிதவள மேலாண்மை பின்பட்டப்படிப்பு பெறுவதற்கான வாய்ப்புக் கிடைத்ததை இலங்கை மாணவர் சமூகம் பெற்ற ஒரு பெரிய வெற்றி என' அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .