2024 மார்ச் 28, வியாழக்கிழமை

காசல் வீதி மகளிர் மருத்துவமனைக்கு பீப்பள்ஸ் லீசிங் நன்கொடை

Editorial   / 2019 நவம்பர் 06 , பி.ப. 07:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

பீப்பள்ஸ் லீசிங், கொழும்பு, காசல் வீதி மகளிர் மருத்துவமனைக்கு நவீன X- கதிர் கட்டமைப்பொன்றை நன்கொடையாக வழங்கியுள்ளது.  

பீப்பள்ஸ் லீசிங் நிறுவனத்தின் சந்தைப்படுத்தல் பிரிவின் பிரதி பொது முகாமையாளர் லக்சந்த குணவர்தன மற்றும் காசல் வீதி மகளிர் மருத்துவமனையின் இடைக்கால பணிப்பாளர் வைத்தியர். அசேல குணவர்தன ஆகியோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.   

புதிதாக நிறுவப்பட்ட டிஜிட்டல் X- கதிர் கட்டமைப்பு, சர்வதேச தர நியமங்களின் பிரகாரம் அமைந்துள்ளது. பாரம்பரிய X- கதிர் படங்களுடன் ஒப்பிடும் போது, புதிய டிஜிட்டல் X- கதிர் கட்டமைப்புகளினூடாக, பல்வேறு அனுகூலங்கள் வழங்கப்படுகின்றன.

டிஜிட்டல் கட்டமைப்பினூடாக, சிறந்த பார்வையிடல் அனுகூலம் மற்றும் தரம் போன்றன வழங்கப்படுவதுடன், துல்லியமான இனங்காணல் மற்றும் தரமான பராமரிப்புக்கு வழிகோலுகின்றன. டிஜிட்டல் படங்களை, கணினியில் சேகரித்து வைக்க முடியும், இதனூடாக அதிகளவு பிரகாசம், அண்மித்து, பெரிதாக்கி, சுழற்றி பார்வையிடல் (darkening, zooming & rotating) போன்ற வசதிகள் போன்றன வழங்கப்படுகின்றன. இதனூடாக, தேவையெனில் உடனடியாக மீள கதிர் படமெடுத்துக் கொள்ள முடியும். சுகாதார பராமரிப்பு நிபுணர்கள் மத்தியில் சிறந்த தொடர்பாடலை பேணுவது, தேவையான பகுதிகளை அடையாளமிடுவது போன்ற பல தெரிவுகளையும் இந்த புதிய டிஜிட்டல் முறையினூடாக மேற்கொள்ள முடியும்.   

டிஜிட்டல் X- கதிர் படங்களை, உடனுக்குடன் பார்வையிடவும், பகிர்ந்து கொள்ளவும் முடியும். இவை பாரம்பரிய X- கதிர் படங்களுடன் ஒப்பிடுகையில் பெருமளவு வினைத்திறன் வாய்ந்தவை. இரசாயன பதப்படுத்தல், பதப்படுத்தல் இயந்திரத்தின் பராமரிப்பு, நிரப்பல் கட்டமைப்புகள் மற்றும் mailing ஜெக்கட்கள் போன்றன தவிர்க்கப்பட்டுள்ளதால், இந்த முறைக்கான செலவுகளும் பெருமளவு குறைந்துள்ளது.

களஞ்சியப்படுத்தல் இடவசதியும் குறைக்கப்பட்டுள்ளது. இருண்ட அறைகள், கெபினட்கள் மற்றும் அச்சிடப்பட்ட பதிவுகளை கோர்ப்பில் இட்டு வைக்க வேண்டிய தேவைகள் தவிர்க்கப்பட்டுள்ளன. டிஜிட்டல் X- கதிர் கட்டமைப்புகள் சுமார் 70 சதவீதம் வரை குறைந்தளவு கதிரியக்கத்தை வெளியிடுகின்றன. இதனால் நோயாளர்களுக்கும், X- கதிர் நுட்பவியலாளர்களுக்கும் பாதுகாப்பானதாக அமைந்துள்ளது.

மேலும், டிஜிட்டல் X- கதிர்களினால் குறிப்பிடத்தக்களவு சூழல் பாதுகாப்பு அனுகூலங்களும் ஏற்படுகின்றன. குறிப்பாக படமெடுக்க எடுக்க பயன்படும் திரவத்தின் பயன்பாடு, படத்தை கழுவிக் கொள்ள பயன்படும் நீர் அகற்றல் போன்ற தேவைகள் தவிர்க்கப்பட்டுள்ளன. இந்த இரசாயன பதார்த்தங்களில் சில்வர் ஹேலோஜென்கள் காணப்படுகின்றன, இவை நச்சுத்தன்மை வாய்ந்தவை, இதன் காரணமாக டிஜிட்டல் X- கதிர் கட்டமைப்புகளை பயன்படுத்துவது மிகவும் உகந்த தெரிவாகும்.    


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X