2024 மார்ச் 28, வியாழக்கிழமை

நிலைபேறாண்மையை நோக்கிய பயணத்துக்காக co-energi உடன் Ex-Pack கைகோர்ப்பு

S.Sekar   / 2021 ஒக்டோபர் 08 , மு.ப. 06:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமது வியாபார செயற்பாடுகளின் காரணமாக சூழலுக்கு ஏற்படக்கூடிய தாக்கத்தைக் குறைத்துக் கொள்ளும் வகையில், Aberdeen Holdings Pvt Ltd இன் துணை நிறுவனமும், உள்நாட்டு மற்றும் சர்வதேச சந்தைகளுக்காக அலைவுநெளிவான பொதியிடல் தீர்வுகளை உற்பத்தி செய்யும் நிறுவனமுமான Expack Corrugated Cartons Ltd, co-energi உடன் கைகோர்த்துள்ளது.

நிலைபேறான மற்றும் வள வினைத்திறன் வாய்ந்த வடிவமைப்புகளை வழங்குவதில் சுயாதீன நிபுணத்துவ நிறுவனமாகத் திகழும் co-energi இனால், Expack இன் நிலைபேறாண்மை தொடர்பான பயணத்துக்கு உயர் உணர்திறன், புத்தாக்கம் மற்றும் சட்ட ரீதியில் ஏற்புடைய வழிமுறைகளை வழங்கி பங்களிப்புச் செய்யும்.

உற்பத்தித் துறையில் ஈடுபட்டுள்ளதுடன், பார இயந்திரங்களை பயன்படுத்துவது என்பதன் காரணமாக பரந்தளவு சூழலில் ஏற்படக்கூடிய தாக்கத்தை குறைத்துக் கொள்ளவது என்பது எப்போதும் சவால்கள் நிறைந்த விடயமாக அமைந்துள்ளது. எவ்வாறாயினும், நிலைபேறாண்மை மற்றும் தொடர்ச்சியான மேம்படுத்தல் பணிகளுக்கான தமது ஒப்பற்ற அர்ப்பணிப்பின் காரணமாக, Expack இனால் பல்வேறு வலுப் பாதுகாப்பு நிகழ்ச்சிகளை அர்த்தமுள்ள வகையில் முன்னெடுத்து சூழலுக்கு ஏற்படக்கூடிய தாக்கங்களை குறைத்துக் கொள்ள முடிந்துள்ளது.

Expack இன் தவிசாளர் சத்தார் காசிம் கருத்துத் தெரிவிக்கையில், சூழலை பாதுகாப்பதில் Expack தன்னை அர்ப்பணித்துள்ளதுடன், சப்புகஸ்கந்த பகுதியில் அமைந்துள்ள தமது தொழிற்சாலைக்கு LEED and Carbon Neutral Certification ஐ பெற்றுக் கொள்ளும் பணிகளை அண்மையில் ஆரம்பித்துள்ளது. இதனூடாக காலநிலை மாற்றம் மற்றும் உயிரியல் பரம்பலுக்கு எதிரான போராட்டத்தின் பிரதான பங்களிப்பு வழங்கும் பங்காளராக கைகோர்த்து செயலாற்றும் பொறுப்பு வாய்ந்த கூட்டாண்மை நிறுவனமாகவும் அமைந்துள்ளது. 2022 ஆம் ஆண்டளவில் காபன் நடுநிலை நிறுவனமாக திகழ்வதற்கான உறுதியை நிறுவனம் கொண்டுள்ளது.

co-energi என்பது கட்டட பொறியியல் ஆலோசனை சேவைகளை வழங்கும் நிறுவனமாகும், “SMART DESIGN'' எனும் கொள்கையின் பிரகாரம் இதன் பெறுமதிகள் மற்றும் கொள்கைகள் போன்றன அமைந்துள்ளன. Green Building, MEP Design Consultancy மற்றும் Carbon Neutral Consultancy போன்றவற்றிலும் நிபுணத்துவம் பெற்றுள்ளது.

10 வருடங்களுக்கு மேலாக உயர் வினைத்திறன் வாய்ந்த AC கட்டமைப்புகள், rooftop solar designs, energy audits, MEP designs/retro fittings போன்றவற்றை வடிவமைப்பதில் அனுபவத்தைக் கொண்டுள்ளதுடன், இலங்கையிலும் பங்களாதேஷிலும் 12 க்கும் அதிகமான LEED Certification களை எய்துவதற்கு பங்களிப்பு வழங்கியுள்ள co-energi, Expack நிறுவனத்துக்கு இந்தப் பயணத்தில் ஆதரவளிக்க முன்வந்துள்ளது.

Leadership in Energy and Environmental Design (LEED) என்பது உலகின் மிகச் சிறந்த Green Building Certification ஆக அமைந்துள்ளது. இதனை US Green Building Council வழங்குகின்றது. தொழிலாளர் சுகாதாரத்துக்கு மிகவும் குறைந்த தாக்கம் மற்றும் இயற்கை சூழலுக்கு குறைத்த பாதிப்பு மற்றும் செயலாற்றும் காலப்பகுதியில் உயர் வள வினைத்திறனை பெற்றுக் கொடுக்கக்கூடிய வகையில், சூழல் பொறுப்புணர்வுடன் கட்டடங்களை வடிவமைத்து நிர்மாணித்தல் மற்றும் செயற்பாடுகளை ஒன்றிணைத்தல் போன்றவற்றுக்கு இது நிறுவனங்களுக்கு உதவுகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X