2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

“Project Run” போட்டியில் வெற்றியீட்டிய பாடசாலைகளுக்கு கொமர்ஷல் வங்கியிடமிருந்து பரிசு

Freelancer   / 2023 மே 26 , மு.ப. 04:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாடு முழுவதும் பாடசாலைகளுக்கு இடையில் நிகழ்ச்சிகளை நடத்தி கல்வி, சமூக, பொருளாதார மற்றும் கலாசார அபிவிருத்தியை மேம்படுத்த செயற்பட்டு வரும் இலாப நோக்கற்ற அமைப்பான Mother Sri Lanka நடத்திய Project Run போட்டிகளில் வெற்றியீட்டிய மூன்று பாடசாலைகளுக்கு கொமர்ஷல் வங்கி சகல வசதிகளையும் கொண்ட தகவல் தொழில்நுட்ப கூடங்களை பரிசாக வழங்கவுள்ளது.

Project Run திட்டத்தின் விருது வழங்கும் நிகழ்வு கொழும்பு அலரி மாளிகையில் இடம்பெற்ற போது இதற்கான உறுதி வழங்கப்பட்டது. சுன்னாகம் மைலனி சைவ மகா வித்தியாலயம், வேகந்தவல கொனதெனிய மகா வித்தியாலயம், பண்டாரவளை ஜஸ்லபி தமிழ் வித்தியாலயம் என்பனவே வெற்றி பெற்ற பாடசாலைகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.

Project Run 2021/2022 என்பது கொமர்ஷல் வங்கிக்கும் மதர் ஸ்ரீலங்காவுக்கும் இடையிலான ஒரு திட்டமாகும். கொமர்ஷல் வங்கியே இதன் பிரதான அனுசரணையாளர். நாட்டில் பாடசாலைகள் மட்டத்தில் இருந்து பொறுப்புவாய்ந்த பிரஜைகளை உருவாக்குவதற்காக அமுல் செய்யப்படுகின்ற ஒரே ஒரு திட்டம் இதுவாகும். சமூகங்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தி சமூகங்களை செழுமையாக்கும் பாடசாலை குழுக்களுக்கு இதன் மூலம் அங்கீகாரம் வழங்கப்படுகின்றது. மாகாண மட்டங்களில் இது முன்னெடுக்கப்பட்டு இறுதியாக நாடளாவிய ரீதியில் தெரிவுகள் இடம்பெறும்.

பங்குபற்றும் பாடசாலைகளால் முன்வைக்கப்படும் சமூக மேம்பாட்டுத் திட்டங்கள் பொறுப்பான குடியுரிமை, ஐக்கியம், தேசிய பெருமை Responsible citizenship, Unity, and National pride (RUN). என அமைகின்றது. பொது வளங்களை பராமரித்தல் மற்றும் திருத்தி அமைத்தல், முதியோர் மீது கவனம் செலுத்தல், இயற்கை முறையில் மரக்கறி வகைகளை உற்பத்தி செய்தல், சிக்கனமான தண்ணீர் தீர்வுகள், கலை மற்றும் கவிதை போட்டிகள், பல்வேறு மாற்று இன மாணவ குழுக்களுடன் தொடர்புகள் போன்ற திட்டங்கள் இதில் அடங்கும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .