2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

அதிவேகமாக நகரும் உணவு மேசை

Kogilavani   / 2010 செப்டெம்பர் 08 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

altபிரிட்டனைச் சேர்ந்த வடிவமைப்பாளர் ஒருவர் அதிவேகமாக நகரக் கூடிய உணவு மேசையொன்றை உருவாக்கியுள்ளார்.

47 வயதுடைய பெரி வட்கின்ஸ் என்பவர் உருவாக்கிய இந்த உணவு மேசை மணித்தியாலத்திற்கு 130 மைல் ( 181  கிலோமீற்றர்) வேகத்தில் நகரக் கூடியதாக உள்ளது. இதற்கு "பாஸ்ட் புட்" எனப் பெயரிடப்பட்டுள்ளது.

இந்த மேசை, வேகமாக பயணிக்கும் தளபாடம் என்ற சாதனைக்குரிய, 2007 ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்ட சோபாவொன்றின் சாதனையை முறியடித்துள்ளது. மேற்படி சோபா மணித்தியாலத்திற்கு 92 மைல் வேகத்தில்  நகரக்கூடியதாக இருந்தது.

இந்த மேசையை உருவாக்கிய வோட்கின்ஸ், இது உலக சாதனை புத்தக்கத்தில் பதியப்படும் என்ற எதிர்பார்ப்புகளுடன் இருக்கின்றார்.

இவர் ஏற்கெனவே அசாதாரண வடிவிலான பல கார்களை உருவாக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தனது புதிய தாயாரிப்பு குறித்து அவர் கூறுகையில், "நான் நினைத்ததைவிட இது மோசமாகத்தான் உள்ளது.   200 மைல் வேகமே எனது இலக்காக இருந்தது" என்று அவர் தெரிவித்துள்ளார்.
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .