2024 மார்ச் 28, வியாழக்கிழமை

கிளிநொச்சி கலாசார விழுமியங்களை பாதுகாக்கின்ற மாவட்டம்

Niroshini   / 2016 மார்ச் 30 , மு.ப. 08:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

கலாசார விழுமியங்களை பின்பற்றுகின்ற மிகவும் தொன்மையான மாவட்டமாக கிளிநொச்சி மாவட்டம் காணப்படுகின்றது என கிளிநொச்சி மாவட்ட  செயலாளர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்தார்.

கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலகத்தின் கலாசார விழாவும் 2015 ஆம் ஆண்டுக்கான கரை எழில் விருது வழங்கும் நிகழ்வும் கரை எழில் நூல் வெளியிட்டு நிகழ்வும் ஆவணப்படமாக்கல் நிகழ்வும் கிளிநொச்சி மாவட்ட கூட்டுறவு சபை மண்டபத்தில் செவ்வாய்க்கிழமை (29) நடைபெற்றது, இதில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து கூறுகையில்,

பல்வேறு பாரம்பரிய நிகழ்ச்சிகள், சுவடிகள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. கலைஞர்கள் படைப்பாளிகள் பல்வேறு செயற்பாடுகளிலும் ஈடுபட்டு வருகின்றனர். மிக அண்மையில் மாவட்டச் செயலக பண்பாட்டு பேரவை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன. ஒரு முழுமையான ஒத்துழைப்போடு அல்லது பங்களிப்போடு மாவட்ட கலாசார விழுமியங்களை பேணுவதற்கு ஒன்றுபட வேண்டும் என்றார்.

கரைச்சிப்பிரதேச செயலகத்தின் கலாசாரப் பேரவையின் ஏற்பாட்டில், கரைச்சி பிரதேச செயலர் கோ.நாகேஸ்வரன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், புகைப்பட ஆவணமாக்கல் நூலான கரை எழில் 2015 நூலும் இறுவெட்டும் வெளியிடப்பட்டன.

தொடர்ந்து வைத்திய கலாநிதி த.சத்தியமூர்த்தியின், மருத்துவ சேவையை பாராட்டி 2015ஆம் ஆண்டுக்கான கரை எழில் உயர்விருது வழங்கி கௌரவிக்கப்பட்டதுடன், நாடாகத்துறைக்கான கரை எழில் 2015ஆம் ஆண்டுக்கான விருதினை செல்லையா கணேசநாதனுக்கும் கவிதைக்கான கரை எழில் 2015ஆம் ஆண்டுக்கான விருது அந்தோனிப்பிள்ளை மங்களராசாவும், நாடாகத்துறைக்கான கரை எழில் 2015 ஆம் ஆண்டுக்கான விருது நாராயணபிள்ளை வேலாயுதமும் இலக்கியத்துறைக்;கான கரைஎழில் ஆண்டுக்கான விருது வைத்தியலிங்கம் மகேந்திரராசாவும் ஊடகத்துறைகான கரை எழில் 2015ஆம் ஆண்டுக்கான விருது கந்தசாமி திருலோகமூர்த்திக்கும் சமூக சேவைக்கான 2015ஆம் ஆண்டு கரை எழில்விருது நாகநாதி சின்னையா ஆகியோருக்கும் வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன், மேலதிக மாவட்டச் செயலர் எஸ்.சத்தியசீலன், உதவி மாவட்டச் செயலர் த.பிருந்தாகரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X