2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

பெரியமடு கிராமத்தில் ஜேர்மன் உதவியுடன்வீட்டுத்திட்டம்

Kogilavani   / 2011 ஏப்ரல் 09 , மு.ப. 08:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.ஜெனி)

ஜேர்மன் 'தயகோணி' அமைப்பின் நிதி உதவியுடன் மன்னார் சமூக நம்பிக்கை நிதியம் (சீ.டி.எப்) அமைப்பானது மன்னார் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குற்பட்ட பெரிய மடு கிராமத்தில் மீள்குடியேறியுள்ள மக்களுக்கான தற்காலிக வீடுகளை அமைக்கவுள்ளது.

இதற்கான அவசர கலந்துரையாடல்  நேற்று வெள்ளிக்கிழமை பெரியமடு கிராமத்தில் இடம் பெற்றது.

இதன்போது மன்னார் சமூக நம்பிக்கை நிதியத்தின் பகுதி நிகழ்ச்சித்திட்ட அதிகாரி முபைல்,  மன்னார் சமூக நம்பிக்கை நிதியத்தின் இணைப்பாளர் இர்ஷாத், நிகழ்ச்சித்திட்ட உறுப்பினர்களான சர்மில் மற்றும் வாகிசன்,  அப்பகுதிக்கான இராணுவத்தின் 613 ஆவது படைப்பிரிவு அதிகாரி, இராணுவத்தின் 61 ஆவது படைப்பிரிவு அதிகாரிகள்,  அப்பகுதியினை சேர்ந்த நூற்றுக்கணக்கான மக்களும் கலந்து கொண்டனர்.

குறித்த கிராமத்தில் முதற்கட்டமாக 250 வறிய குடும்பங்கள் தெரிவு செய்யப்பட்டு தற்காலிக வீடுகள் வழங்கப்படவுள்ளது.

இதேவேளை குறித்த கிராமத்தில் 20 பொது மலசலகூடங்களும் அமைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .