2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

மன்னாருக்கு ஞானசார தேரர் திடீர் விஜயம்

Niroshini   / 2021 செப்டெம்பர் 23 , பி.ப. 06:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

மன்னார் - மடு பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட கோயில்மோட்டை பகுதிக்கு, நேற்று  (22) மாலை, பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர், திடீர் விஜயமொன்றை மேற்கொண்டிருந்தார்.   

கோயில்மோட்டை பகுதியில், சுமார் 40 வருடங்களாக, அப்பகுதி மக்கள்   விவசாயம் செய்து வரும் நிலையில், குறித்த அரச காணியை, தங்களுக்கு வழங்க வேண்டுமென, கோவில்மோட்டை விவசாயிகள் உண்ணாவிரதப் போராட்டம் என பல போராட்டங்களை தொடர்ச்சியாக மேற்கொண்டு வந்தனர்.

இந்நிலையில், வடமாகாண ஆளுநர், குறித்த காணியை கோயில்மோட்டை விவசாயிகளுக்கு வழங்குமாறு கோரிக்கைவிடுத்திருந்தார். 

எனினும், குறித்த காணி, தங்களுக்கு வேண்டுமென்று, மடு தேவாலய பரிபாலன சபையினர் கோரி வந்ததுடன், குறித்த காணியை பெற்றுக்கொள்வதற்கான பல்வேறுநடவடிக்கைகளையும் மேற்கொண்டிருந்தனர்.

இந்நிலையில், மன்னார் திருக்கேதீஸ்வர கோவிலில், நேற்று (22) மாலை,  கொரோனா இல்லாத இலங்கை உருவாக வேண்டும் என  வேண்டி இடம்பெற்ற விசேட பூஜையில் பங்கேற்பதற்காக,  பொதுபலசேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர், மன்னாருக்கு திடீர் விஜயமொன்றை மேற்கொண்டிருந்தார்.

மன்னாருக்கு வந்த அவரை, இடைவழியில் வழிமறித்த கோயில்மோட்டை விவசாயிகள், தங்களின் காணிப் பிரச்சினையை தீர்த்து தருமாறு கோரிக்கை விடுத்தனர்.

இதன் அடிப்படையில், கோயில்மோட்டை வயல் காணிக்கு, கலகொட அத்தே ஞானசார தேரர் தலைமையிலான குழுவினர்நேரடியாக சென்று பார்வையிட்டனர்.

அதை தொடர்ந்து கருத்துத் தெரிவித்த ஞானசார தேரர், தேவாலயங்களுக்கு காணிகளை வழங்குவதை விட, மக்களின்பசியை தீர்ப்பதே முக்கியம் என்றார்.

குறித்த காணியை கோயில்மோட்டை விவசாயிகளுக்கு பெற்றுத்தர தன்னால் இயன்ற நடவடிக்கை எடுப்பதாகவும், அவர் உறுதியளித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .