2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

முல்லைத்தீவு ஆலய நிர்வாகத்துக்கு இடைக்கால தடை

Editorial   / 2022 ஓகஸ்ட் 05 , பி.ப. 12:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

செ.கீதாஞ்சன்

முல்லைத்தீவு மாவட்டத்தில் வரலாற்று சிறப்பு மிக்க வற்பாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தின் நிர்வாகத்துக்கு எதிராக முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றம் இடைக்கால தடையுத்தரவை பிறப்பித்துள்ளது.

 30 ஆண்டுகால நிதி,நகை,மோசடிக்கு எதிராக நிர்வாகத்தின் தலைவர்,செயலாளர்,பொருளாளர் ஆகியோருக்கு எதிராக நிர்வாக உறுப்பினர்கள் சிலரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் குறிப்பிட்ட நிர்வாக உறுப்பினர்களுக்கு இடைக்கால தடை உத்தரவினை நீதவான் நீதிமன்றம் வழங்கியுள்ளது.

 

வற்றாப்பளை அம்மல் ஆலய நிர்வாகத்தின் செயற்பாட்டில் திருப்தியில்லாத நிலையில் நடைபெற்ற நிதி,நகை மோசடிகள் தொடர்பில் நிர்வாக உறுப்பினர்கள் ஏழு பேரால் நிர்வாகத்தின் பதவிநிலை உறுப்பினர்கள் 6 பேருக்கு எதிராக முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் வழங்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கு கடந்த 01.07.2022 அன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது தலைவர் செயலாளர்,பொருளாளர் ஆகியோருக்கு இடைக்கால தடை உத்தரவு மன்றினால் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு விசாரணை மீண்டும் 11.07.2022 அன்று மன்றில் எடுத்துக்கொள்ளப்பட்ட போது நிர்வாக உறுப்பினர்களின் தடை உத்தரவு நீடிக்கப்பட்டுள்ளதுடன் வழக்கின் விசாரணை எதிர்வரும் 28.08.2022 திகதியிடப்பட்டுள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .