2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

கிளிநொச்சியில் 25 கிராமங்களுக்கு குடிநீர் விநியோகம்

Suganthini Ratnam   / 2014 ஏப்ரல் 06 , மு.ப. 07:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி மாவட்;டத்தின் கரைச்சி மற்றும் கண்டாவளை பிரதேச செயலகப் பிரிவுகளுக்குட்பட்ட 19 கிராம அலுவலகர்; பிரிவுகளிலுள்ள 25 கிராமங்களுக்கு மார்ச் மாதத்திலிருந்து கரைச்சி பிரதேச சபை பவுசர் மூலம் குடிநீர் விநியோகித்து வருவதாக கரைச்சி பிரதேச சபையின் செயலாளர் இ.கிருஸ்ணகுமார்  தெரிவித்தார்.

கிளிநொச்சி மாவட்டத்தில் தற்போது வறட்சி நிலவுவதால்  பொதுமக்கள் குடிநீருக்காக  அவஸ்தைப்படுகின்றனர். இந்நிலையில், தற்போது மேற்படி கிராமங்களுக்கு நாளொன்றுக்கு 17,000 லீற்றர் குடிநீர் விநியோகிக்கப்படுகின்றன. இருப்பினும், குடிநீரின் தேவை நாளுக்குநாள் அதிகரித்து வருவதாகவும் அவர் கூறினார்.

தட்டுவன்கொட்டி, பொன்னகர், 50 வீட்டுத்திட்டம், 72 வீட்டுத்திட்டம், 17 வீட்டுத்திட்டம், உமையாள்புரம், ஸ்கந்தபுரம், அக்கராயன், வட்டக்கச்சி, பாரதிபுரம், கிருஸ்ணபுரம், செல்வாநகர், கணேசபுரம், உதயநகர் கிழக்கு, கோணாவில், மலையாளபுரம், விவேகானந்த நகர், சிவிச்சென்ரர், உருத்திரபுரம் வடக்கு, கண்ணகிபுரம், பெரியபரந்தன், செருக்கன்,   சாளம்பன், பரந்தன், கமறிக்குடா ஆகிய கிராமங்களுக்கே  குடிநீர் விநியோகிக்கப்படுகின்றன.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X