2024 ஏப்ரல் 16, செவ்வாய்க்கிழமை

வரலாற்றில் இன்று: ஒக்டோபர் 20

Super User   / 2010 ஒக்டோபர் 19 , பி.ப. 08:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

1818: அமெரிக்காவுக்கும் பிரிட்டனுக்கும் இடையில்  '1818 ஆம் ஆண்டு ஒப்பந்தம்' கையெழுத்திடப்பட்டது. கனேடிய- அமெரிக்க எல்லை விவகாரம் இதன் மூலம் தீர்க்கப்பட்டது.


1827: நவோரினோ யுத்தத்தில் பிரித்தானிய, பிரெஞ்சு, ரஷ்ய படைகளால் துருக்கி, எகிப்து படைகள் தோற்கடிக்கப்பட்டன.
 

1910: டைட்டானிக்கின் சகோதர கப்பலான ஆர்.எம்.எஸ்.ஒலிம்பிக், வட அயர்லாந்தின் பெல்பாஸ்ட் நகரிலிருந்து தனது முதல் பயணத்தை ஆரம்பித்தது.


1935: சீனாவில் மாவோ சேதுங் தலைமையிலான கம்யூனிஸ்ட் கட்சியின் 'நீண்ட பவனி' முடிவடைந்தது.


1944: அமெரிக்க ஜெனரல் மெக் ஆர்தர் மீண்டும் பிலிப்பைன்ஸுக்குத் திரும்பியதன் மூலம், 'நான் மீண்டும் வருவேன்' என்று அளித்த வாக்குறுதியை நிறைவேற்றினார்.


1968: அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஜோன் எவ். கென்னடியின் மனைவி ஜாக்குலின், எகிப்திய கோடீஸ்வரர் ஒனாசிஸை திருமணம் செய்தார்.


1973:சிட்னி நகரின் புகழ்பெற்ற கட்டிடமான ஒபாரா ஹவுஸ் திறக்கப்பட்டது.


1982: மொஸ்கோ நகரில் நடைபெற்ற கழகங்களுக்கிடையிலான ஐரோப்பிய கிண்ணக் கால்பந்தாட்டப் போட்டியின்போது சனநெரிசலில் சிக்கி 66 பேர் பலி.
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .