2024 மார்ச் 28, வியாழக்கிழமை

வரலாற்றில் இன்று: செப்டெம்பர் 26

Super User   / 2011 செப்டெம்பர் 25 , பி.ப. 07:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

 


1820: தக்காளி நச்சுத்தன்மை அற்றது என்பதை கேணல் ரொபர்ட் கிப்பன் என்பவர் அமெரிக்க நியூ ஜேர்ஸி மாநில நீதிமன்றமொன்றின் படிகட்டுகளில் வைத்து பல தக்காளிகளை உட்கொண்டதன் மூலம் நிரூபித்தார்.

1954: ஜப்பானிய கப்பலான 'டோயா மாரு' சுகாரு நீரிணையில் மூழ்கியதால் 1172 பேர் பலி.

1959: பௌத்த பிக்கு ஒருவரால் முதல்நாள் சுடப்பட்ட இலங்கை பிரதமர் எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்க உயிரிழந்தார்.

1960: முதல் தடவையாக தொலைக்காட்சியில் ஒளிபரப்பான அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல் வேட்பாளர்களுககிடையிலான விவாதத்தில் ரிச்சர்ட் நிக்ஸன், ஜோன் எவ் கென்னடி ஆகியோர் பங்குபற்றினர்.

1960:  சோவியத் யூனியனை கியூபா ஆதரிக்கும் என பிடெல் காஸ்ட்ரோ அறிவித்தார்.

1962: யேமன் அரபு குடியரசு ஸ்தாபிக்கப்பட்டது.

1983: சோவியத் அணுவாயுத தாக்குதல் கண்காணிப்பு பொறிமுறை எழுப்பிய அபாய எச்சரிக்கை கணினி கோளாறினால் ஏற்பட்டது எனவும் அமெரிக்க அணுவாயுத ஏவுகணையினால் ஏற்பட்டது அல்ல எனவும் சோவியத் இராணுவ அதிகாரி ஸ்டானஸ்லோவ் பெட்ரோவ் கண்டறிந்ததன் மூலம்

1984: ஹொங்கொங்கை சீனாவிடம் ஒப்படைக்க பிரிட்டன் சம்மதித்தது.

1997: இந்தோனேஷிய விமான விபத்தில் 234 பேர் பலி.

2002: காம்பியா கடல்பகுதியில் செனகல் கப்பலான எம்.வி. ஜூலா கவிழ்ந்ததால்  1863 பேர் பலி.

2007: பிலிப்பைன்ஸ், வியட்நாம், கம்போடியா, லாவோஸ், தாய்லாந்து நாடுகளில்  வீசிய  சூறாவளியினால் சுமார 700 பேர் பலி.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X