2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

கொரோனா சிகிச்சை நிலையத்தில் இருந்து திரும்பியவர் திடீர் மரணம்

Nirosh   / 2021 மார்ச் 08 , மு.ப. 11:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.நிதர்ஷன்

யாழ்ப்பாணம் - கோப்பாய் கொரோனா சிகிச்சை நிலையத்தில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய 75 வயதான பெண் ஒருவர், திடீர் சுகயீனம் காரணமாக, இன்று (08) உயிரிழந்துள்ளார். 
 
பருத்துறை - தும்பளை பகுதியில் நடன ஆசிரியை ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியிருந்ததைத் தொடர்ந்து, அவருடைய தாயார் உட்பட குடும்ப அங்கத்தவர்கள் 6 பேருக்கும் கொரோனா தொற்று உறுதியாகியிருந்தது. 

இவ்வாறு தொற்றுக்குள்ளான நடன ஆசிரியையின் தாயார், கோப்பாய் கொரோனா சிகிச்சை நிலையத்தில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு, சிகிச்கையளிக்கப்பட்டு நேற்று  (07)   வீடு திரும்பியிருந்தார். 

இந்நிலையில், இன்றைய தினம்,  அவருடைய ஆ.ஜென்சன் றொனால்ட் கண்காணிப்புக்காக அவருடைய வீட்டுக்கு, சுகாதார பரிசோதகர் சென்றிருந்த நிலையில், அவர் திடீர் சுகயீனமடைந்திருப்பதாக உறவினர்கள் சுகாதார பரிசோதகருக்கு கூறியுள்ளனர். 

இதனையடுத்து, உடனடியாக 1990 அம்புலன்ஸ் மூலம், பருத்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதித்தபோதும், அவர் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

 
இந்நிலையில், அவருக்கு மீண்டும் கி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளது. 

இது தொடர்பில்  சுகாதார பிரிவினர் கூறுகையில், சிகிச்சை நிலையத்திலிருந்து திரும்பியவர் 14 நாள்கள் தனிமைப்படுத்தலில் இருக்க வேண்டுமெனவும் அந்த 2 வாரங்களுக்கு ஏற்படும் இறப்பு கொரோனா இறப்பாகவே கருத முடியும் எனவும் கூறியுள்ளனர். 

ஆனாலும், பி.சி.ஆர் பரிசோதனைகளின் பின்னரே, மாகாண சுகாதார அமைச்சு அதனை உத்தியோகபூர்வமாக அறிவிக்கும் என தெரிவிக்கப்படுகின்றது. 

எனினும், கொரோனா மரணமாக கருதப்பட்டு, கொவிட் -19 விதிகளுக்கமைய இவரது இறுதி சடங்குக்கான ஒழுங்குகளை சுகாதார பிரிவினர் முன்னெடுத்துள்ளனர்.
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .