2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

“மாவீரர் தின நிகழ்வை நடத்த வேண்டாம்” பொலிஸார் அறிவிப்பு

Freelancer   / 2022 நவம்பர் 26 , பி.ப. 02:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

வி.ரி.சகாதேவராஜா

திருக்கோவில் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட  கஞ்சி குடிச்சாறு மாவீரர் துயிலும் இல்லத்தில் நடக்கவிருக்கின்ற மாவீரர் தின நினைவேந்தல்  நிகழ்வை நடத்துவதை தவிர்க்குமாறும், அதிலிருந்து உடனடியாக விலகி நிற்குமாறும் திருக்கோவில் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி அறிவித்துள்ளார்.

பொத்துவில் பிரதேச சபையின் உப தவிசாளர் பெருமாள் பார்த்திபனுக்கு இந்த அறிவுறுத்தல் கடிதம் நேற்று கையளிக்கப்பட்டுள்ளது.

அதன்படி நேற்று கஞ்சிகுடிச்சாறு புலிகள் இயக்கத்தின் மயான பூமியில் புதைக்கப்பட்டுள்ள மரணித்த புலிகளை நினைவு கூரவுள்ள மாவீரர் தின நிகழ்வுகளை செயல்படுத்த வேண்டாம் என்று அவர் கேட்டுள்ளார் .

2011 .08. 29ஆம் திகதி இலங்கையின் ஜனநாயக சோசலிசக் குடியரசின் இலக்கம்  1721(02) கீழ் விசேட வர்த்தமானி அறிவித்தல் மூலமாக தடை செய்யப்பட்டுள்ள புலிகள் இயக்கம் தொடர்பான எந்தவித செயல்பாடுகளோ நிகழ்வுகளோ நடத்துவது தண்டனைக்குரிய குற்றமாகும். 

எனவே அதை மீறி இவ்வாறான நிகழ்வுகளில்  கலந்து கொண்டால் சட்டரீதியான நடவடிக்கைகளை எடுக்க நேரிடும் என்று திருக்கோவில் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி அறிவுறுத்தல் விடுத்துள்ளார்..

இதன் பிரதி அக்கரைப்பற்று பிரதி பொலிஸ் அத்தியட்சகருக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. R


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X