2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

’டெல்டா’ தொடர்பில் அவதானம்

Princiya Dixci   / 2021 ஜூலை 18 , பி.ப. 12:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம்.நூர்தீன்

நாட்டில் தற்போது வேகமாகப் பரவிவரும் 'டெல்டா' திரிபு தொடர்பில் காத்தான்குடி நகருக்கான கொவிட்–19 தடுப்புச் செயலணி விசேட அவதானம் செலுத்தியுள்ளது.

இதன்படி, இச்செயலணியினால் சில தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளன.

வெளி மாகாணத்திலிருந்து காத்தான்குடிக்கு வருகை தருபவர்கள், சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் தங்களைப் பதிவு செய்துகொள்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அவ்வாறு பதிவு செய்யத் தவறுபவர்கள் மீண்டும் செல்ல 'பாஸ்' அனுமதி வழங்கப்படமாட்டாது என காத்தான்குடி நகருக்கான கொவிட்–19 தடுப்புச் செயலணி அறிவித்துள்ளது.

பெருநாள் கால சன நெரிசலைக் குறைக்கும் வகையில் நேற்றிலிருந்து (17) எதிர்வரும் வியாழக்கிழமை (22) வரை காத்தான்குடி நகரில் உள்ள அத்தியாவசிய சேவைகள் உட்பட சகல வர்த்தக நிலையங்களும் இரவு 8 மணியுடன் மூடப்பட வேண்டும்.

அத்துடன், கடற்கரை, ஆற்றங்கரை போன்ற இடங்களில் பொதுமக்கள் ஒன்றுகூடுவது எதிர்வரும் 25ஆம் திகதி வரை தடைசெய்யப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், பிரதான வீதிகளில் கூடும்  பொதுமக்களுக்கு சகாதாரப் பிரிவினரால் தொடர்ச்சியாக பி.சி.ஆர் மற்றும் அன்டிஜன் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்படுவார்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .