2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

மட்டு.மாவட்டத்தில் 76 யானைகள் பலி

Freelancer   / 2022 ஜூன் 14 , மு.ப. 11:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரீ.எல்.ஜவ்பர்கான்

மட்டக்களப்பு மாவட்டத்தில் யானைகளுக்கும் மனிதர்களுக்குமிடையிலான மோதல்கள் தொடர்ந்த வண்ணமே உள்ளது.

கடந்த ஆறு ஆண்டுகளில் இம்மாவட்டத்தில் 76 யானைகள் இறந்துள்ளதுடன், 149 யானைகள் காயமடைந்துள்ளதாக, மட்டக்களப்பு மாவட்ட காணி விவாகாரங்களுக்குப் பொறுப்பான மேலதிக அரசாங்க அதிபார் திருமதி. நவரூபரங்சனி தெரிவித்தார்.

இக்காலப் பகுதியில் காட்டு யானைகள் 660 சொத்துகளுக்கும் சேதத்தை ஏற்படுத்தியிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

செங்கலடி பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட, உன்னிச்சை 10ஆம் கட்டை கிராமத்தில் நீண்டகாலமாக இயங்கிவந்த கோழிப்பண்ணை காட்டு யானை தாக்கத்தால் முற்றாக சேதமடைந்தமையால், குறித்த பண்ணையையே இழுத்து மூடிவிட்டனர்.

மேலும், குறித்த கிராமத்தில் யானைகளின் அட்டகாசம் தொடர்பாக அகில இலங்கை விவாசாயிகள் சம்மேளன மட்டக்களப்பு மாவட்ட தலைவர் கே.யோகவேள் கருத்து  வெளியிட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .