2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

பாசிக்குடா பிரதேசத்தில் புதிய இரங்குதுறை அமைப்பதற்கான கூட்டம்

Super User   / 2011 ஏப்ரல் 03 , மு.ப. 11:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஆர்.அனுருத்தன்)

மட்டக்களப்பு, பாசிக்குடா பிரதேசத்தில் கடற்றொழிலில் ஈடுபடும் மீனவர்களின் நன்மை கருதி இரங்குதுறை ஒன்றை அமைப்பதற்கான முதலாம் கட்ட பணிகளை மேற்க்கொள்ளும் கலந்துரையாடல் கூட்டமொன்று இன்று ஞாயிற்றுக்கிழமை வாழைச்சேனை பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.

வாழைச்சேனை பிரதேச செயலாளர் எஸ்.கிரிதரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் மாகாண சபை உறுப்பினர் பூ.பிரசாந்தன், மட்டக்களப்பு கடற்றொழில் மீன்பிடி திணைக்கள நீரியல் வள உதவி ஆணையாளர் எஸ்.ரி.ஜோஜ் மற்றும் அப்பகுதி மீனவர்களும் கலந்து கொண்டனர்.

தற்போது பாசிக்குடாவில் உள்ள கடற்ரையில் ஓரமாக புதிய பல உல்லாச விடுதிகள் பாரிய செலவில் அமைக்கப்பட்டு வருகின்றன. இவ்விடங்களிலேயே முன்பு மீனவர்கள் தங்களது இழுவை படகுகளை நிறுத்தி வைத்திருந்தனர்.

உல்லாச பயணிகளின் வருகையினை தொடர்ந்து அப்பகுதி மாசடைகின்றது என்றும் சுற்றுலா பயணிகளுக்கு படகுகள் நிறுத்துவதினால் இடைஞல்கள் ஏற்படுகின்றது என்ற காரணம் கருதி சம்பந்நப்பட்ட அமைச்சு வேறு இடத்திற்கு இடமாற்றும் படி கேட்டதினால் மீனவர்கள் முதலமைச்சரிடம் கோரிக்கை விட்டதனர்.

இதனை தொடர்ந்தே இன்று ஞாயிற்றுக்கிழமை புதிய இரங்குதுறை அமைப்பதற்கான கூட்டம் இடம்பெற்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X