2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

ஏறாவூரில் டெங்கு நுளம்பு ஒழிப்பு நடவடிக்கை துரிதம்

Kogilavani   / 2011 செப்டெம்பர் 21 , மு.ப. 06:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஏ.எச்.ஏ. ஹூஸைன்)
ஏறாவூரில் கடந்த பத்து தினங்களுக்குள் பத்து டெங்கு நோயாளிகள் இனங்காணப்பட்டதையடுத்து டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக ஏறாவூர் சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் எம்.எச்.எம் தாரிக் தெரிவித்தார்.

நாடளாவிய ரீதியில் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள தேசிய சுகாதார வாரத்தை முன்னிட்டு இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.
ஏறாவூரில் டெங்கு நோயாளிகள் இனங்காணப்பட்டிருப்பதையடுத்து மட்டக்களப்பு சுகாதாரப்பகுதியிலிருந்து வருகை தந்த விஷேட சுகாதார பரிசோதனைக்குழுவினர் பூச்சிகள் குடம்பிகள் உற்பத்தியாகக்கூடிய இடங்களைப் பரிசோதித்துள்ளனர்.

ஏறாவூரில் டயர்கள், வாழை மரத்தண்டுகள், நீர்த்தாங்கிகள் என்பனவற்றிலிருந்து டெங்கு நுளம்புகள் உற்பத்தியாகியிருக்கக் கூடும் என விஷேட சுகாதார பரிசோதனைக்குழுவினர் கருதுவதாக சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் எம்.எச்.எம் தாரிக் கூறினார்.

ஏறாவூர் பணிக்கர் வீதியில் நான்கு பேர் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவ் வீதியில் டயர்கடைக்குப் பின்னால் உள்ள வீட்டில்  ஒன்றரை வயதிற்குட்பட்ட இரு குழந்தைகள் டெங்கு நோய்க்கு உள்ளாகி சிகிச்சை பெற்று வருகின்றனர். தற்போது இந்த டயர் கடை  அந்த இடத்திலிருந்து அப்புறப்படுத்தப்பட்டுள்ளது. அதேபோல் இதற்கு சமீபமாக தற்போது மூடப்பட்டுக் கிடக்கும் இன்னொரு டயர் கடையின் பின்புறமாக டயர்கள் குவிக்கப்பட்டுக்கிடக்கின்றன என சுகாதார வைத்திய அதிகாரி எம்.எச்.எம் தாரிக் தெரிவித்தார்.

நேற்று முன்தினம் மட்டக்களப்பிலிருந்து வந்த விஷேட மலேரியா டெங்கு தடுப்புக் குழுவினரும் நகர முதல்வர் அலிஸாஹிர் மௌலானாவும் பணிக்கர் வீதியில் டெங்கு ஒழிப்பு புகை விசுறியதோடு;, அகற்றப்பட்ட டயர் கடையின் பின்புறமிருந்த பாழடைந்த கிணற்றையும் பார்வையிட்டனர்.

ஏறாவூர் நகர சபையின் தலைவர் அலிஸாஹிர் மௌலானாவும் விஷேட சுகாதார நடவடிக்கைகளை முன்னெடுத்து டெங்கு ஒழிப்பு நடவடிக்கைக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்குவதாகவும்  ஏறாவூர் சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் எம்.எச்.எம். தாரிக் குறிப்பிட்டார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X