2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

இலங்கைக்கான நோர்வே தூதுவர் - அமைச்சர் டக்ளஸ் சந்திப்பு

Super User   / 2011 மார்ச் 30 , மு.ப. 06:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

யாழ். மாவட்டம் அதிசயிக்கத்தக்க வகையில் அபிவிருத்தி கண்டு வருகின்றது என இலங்கைக்கான நோர்வே தூதுவர் ஹில்டே ஹரல்ட்ஸ்ரட் தெரிவித்ததாக ஈ.பி.டி.பி. வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கொழும்பில் நேற்று திங்கட்கிழமை அமைச்சர் டக்ளஸ் தேவானந்த மற்றும் நோர்வே தூதுவர் ஹில்டே ஹரல்ட்ஸ்ரட் ஆகியோருக்கு இடையில் இடம்பெற்ற சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

கடந்த வாரம் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற யாழ் இசை விழாவில் தான் கலந்துகொண்டதாகவும் பல நாடுகளை சேர்ந்த கலைஞர்கள் பங்கேற்று பல்வேறு கலை நிகழ்வுகளில் யாழ், வன்னி மக்களின் கலை, கலாசார, பண்பாட்டு விழுமியங்களுடனான கலைப்படைப்புக்களை தாம் மெய்மறந்து ரசித்ததாகவும் குறிப்பிட்ட அவர், யாழ் பொது நூலகம் மிக அழகாகவும் நேர்த்தியாகவும் காணப்படுவதாக  இலங்கைக்கான நோர்வே தூதுவர் ஹில்டே ஹரல்ட்ஸ்ரட தெரிவித்தார்.

2007ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்திற்கு சென்ற போது யுத்தத்தினால் ஏற்பட்ட அழிவுகளையே காணக்கூடியதாக இருந்ததாகவும் தற்போது சிறந்ததொரு சாதகமான சூழ்நிலையில் அம்மாவட்டத்தில் பல்வேறு அபிவிருத்திப் பணிகள் துரித கதியில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இந்த சந்திப்பில் நோர்வே தூதுவரக மேலதிக செயலாளர் சொன்றே பியோட் வீற் மற்றும் அமைச்சரின் ஆலோசகர் திருமதி வி.ஜெகராசசிங்கம், யாழ் மாநகர மேயர் திருமதி யோகேஸ்வரி பற்குணராசா ஆகியோர் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .