2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

ஒரே அறிகுறிகளைக் காட்டும் கொவிட் மற்றும் டெங்கு

Freelancer   / 2022 பெப்ரவரி 18 , மு.ப. 08:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டில் கொவிட்-19 மற்றும் டெங்கு இரண்டு நோய்களும் ஒரே மாதிரியான அறிகுறிகளைக் காட்டுவதாகவும், நோயாளர்களின் எண்ணிக்கையும் ஒரே நேரத்தில் அதிகரித்து வருவதாகவும் சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

காய்ச்சல், தலைவலி, உடல்வலி ஆகிய இரண்டு நோய்களிலும் காணக்கூடிய ஒரே மாதிரியான அறிகுறிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளதால் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு கொழும்பு சீமாட்டி சிறுவர் வைத்தியசாலையில் விசேட வைத்திய நிபுணர் தீபால் பெரேரா தெரிவித்தார்.

"இதனால், நோய் அறிகுறிகள் கண்டறியப்பட்டால் தாமாக ஒரு முடிவுக்கு வராமல் விரைவில் மருத்துவரின் ஆலோசனையைப் பெற்றுக்கொள்ளவேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

இது தவிர, தற்போது கொவிட்-19 மற்றும் டெங்குவின் அறிகுறிகள் ஒரே மாதிரியாக இருப்பதால், தவறாக நோயைப் புரிந்துகொள்ளவும் வாய்ப்பு உள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை, தற்போது டெங்கு பரவும் அபாயம் குறைந்துள்ள போதிலும், நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின் வைத்தியர் ஷிலந்தி செனவிரத்ன டெய்லி மிரருக்கு தெரிவித்தார்.

எவ்வாறாயினும், அனைத்து வகையான நுளம்புகள் பெருகும் இடங்கள் குறித்தும் அவதானமாக இருக்குமாறும், டெங்குவைத் தடுக்கும் வகையில் அவற்றை அழிக்கத் தொடர்ந்து நடவடிக்கை எடுக்குமாறும் பொதுமக்களை அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

நாட்டில் ஜனவரி மாதத்தில் 7,702 பேரும் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இறுதியாக வெளியான அறிக்கைப்படி பெப்ரவரி மாதத்தில் 1,801 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதனிடையே நாட்டின் தினசரி கொவிட் வழக்குகளின் எண்ணிக்கையும் பத்தொன்பதாவது நாளாகவும் 1,000ஐத் தாண்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .