2024 ஏப்ரல் 16, செவ்வாய்க்கிழமை

10 நாட்களில் 20,000 கொவிட் தொற்றாளர்கள்

Freelancer   / 2022 பெப்ரவரி 10 , மு.ப. 08:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டில் கடந்த 10 நாட்களில் மட்டும் கிட்டத்தட்ட 20,000 கொவிட் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ள நிலையில், தற்போது ஓமிக்ரான் அலை தீவிரமாக பரவி வருவதாக  சுகாதார நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

பெரும்பாலான மக்கள் தடுப்பூசி போடப்பட்டதன் காரணமாக டெல்டா அலையுடன் ஒப்பிடும்போது, ​​மருத்துவமனையில் சேர்க்கப்படுபவர்கள் எண்ணிக்கை குறைவாக உள்ளதாக மருத்துவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

எனினும்  நோய்த்தொற்று ஏற்பட்டால் தோற்றும் அறிகுறிகளைக் குறைப்பதற்காக மேலும் தாமதமின்றி மக்கள் பூஸ்டர் டோஸ்களைப் பெறவேண்டும் என சுகாதார நிபுணர்கள் வலியுறுத்தினர்.

இலங்கை  பூஸ்டர் தடுப்பூசிகளைப் பெற்றவர்களில் இன்னும் குறைந்த சதவீதத்தையே காட்டும் அதேவேளை, பூஸ்டர்கள் டோஸ்கள் வழங்கப்படாவிட்டால், அவை ஜூலை மாதத்திற்குள் காலாவதியாகிவிடும் என்றும் சுகாதார அதிகாரிகள் கவலை வெளியிட்டுள்ளனர்.

அங்கீகரிக்கப்பட்ட எந்த ஒரு கொவிட் தடுப்பூசியின் 2 டோஸ்களை பெற்ற 20 வயதுக்கு மேற்பட்டவர்கள் பூஸ்டர் டோஸாகப் பைசரை  பெறத் தகுதியுடையவர்கள் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

நாட்டில் தற்போது கடந்த சில வாரங்களில் நோய்த்தொற்றுகளின் விகிதம் கணிசமாக உயர்ந்துள்ள போதிலும் பூஸ்டர் டோசைப் பெற்றவர்கள் இன்னும் அதைப் பெறாதவர்களை விட குறைவான அறிகுறிகளைக் காட்டுவதாக மருத்துவர்கள் குறிப்பிடுகின்றனர்.

இருப்பினும், தடிமன், தலைவலி, சோர்வு, தும்மல், தொண்டை வலி, தொடர் இருமல், கரகரப்பான குரல், சளி அல்லது நடுக்கம், காய்ச்சல், தலைசுற்றல், தசைவலி, வாசனை இழப்பு அல்லது மார்பு வலி போன்றவற்றால் பாதிக்கப்பட்டால் உடனடியாக பி.சி.ஆர் பரிசோதனை செய்து, அதன் முடிவு வரும் வரை வீட்டிலேயே தனிமைப்படுத்தி கொள்ளும்படி மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். 

கொவிட்-19 நோயாளியுடன் தொடர்பை பேணிய பூஸ்டர் டோஸ் பெற்றவர்கள் தனிமைப்படுத்த வேண்டிய அவசியமில்லை. இருப்பினும், அறிகுறிகளைக் அவதானிக்கவும், வீடுகளை விட்டு வெளியேறும்போது முகக்கவசங்களை அணியவும் மருத்துவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இருப்பினும், கொவிட் நோயாளியுடன் தொடர்பு கொண்ட,  பூஸ்டர் டோஸைப் பெறாதவர்கள்  பி.சி.ஆர் சோதனைக்கு உட்படுத்தப்படவதோடு குறைந்தபட்சம் 10 நாட்களுக்கு வீட்டில் தனிமைப்படுத்தப்பட வேண்டும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, பைசர் தடுப்பூசிகள் பற்றிய கட்டுக்கதைகள் மற்றும் தவறான தகவல்களை மக்கள் நம்ப வேண்டாம் என்றும் சுகாதார அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .