2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

திருமலையில் பிரதமர் ஜயரட்ன

Super User   / 2010 ஒக்டோபர் 26 , பி.ப. 01:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.எஸ்.குமார்)

திருகோணமலை மாவட்டத்துக்கு பிரதமர் தி.மு.ஜயரட்ன  இன்று செவ்வாய்க்கிழமை விஜயம் செய்தார்.

கந்தளாயில் பௌத்த மத தலைவர்களையும், கிண்ணியாவில் இஸ்லாமிய மதத் தலைவர்களையும், திருகோணமலை மாவட்ட செயலகத்தில் இந்து மதத்தலைவர்களையும், புனித சூசையப்பர் கல்லூரியில் கிறிஸ்தவ மதத்தலைவர்களையும் சந்தித்தார்.

பிரதமரின் விஜயத்தை முன்னிட்டு மாவட்ட செயலகம்  மகர தோரணங்களாலும், மாவிலைகளாலும், இந்து கொடிகளாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தது.

புத்திரகாளி அம்பாள் தேவஸ்தான பிரதம குரு  சோ.ரவிச்சந்திர குருக்கள் பிரதமரை வரவேற்றார். பிரதமருடன், புத்தசாசன பிரதி அமைச்சர் எம்.கே.டி.எஸ்.குணவர்த்தன, கிழக்கு மாகாண ஆளுநர் ரியர் அட்மிரல் மொகான் விஜய விக்கிரம, கிழக்கு மாகாண முதலமைச்சர் சி.சந்திரகாந்தன்,  மாவட்ட அரசாங்க அதிபர் மேஜர் ஜெனரல் ரஞ்சித் சில்வா,  கிழக்கு மாகாண சபை பிரதித் தவைலர் ஆரியவதி கலபதி ஆகியோரும் இச்சந்திப்பில்  கலந்து கொண்டனர்.

திருகோணேஸ்வரர் ஆலயத்தின் பரிபாலன சபையின் செயலாளர் க.அருள்சுப்பிரமணியம் மாவட்டத்தில் இந்து ஆலயங்களின் நிலைகள் பற்றியும் குறைபாடுகள் பற்றியும் எடுத்துரைத்தார். பிரமதர் இந்து ஆலயங்களின் வளர்ச்சிக்கான நிதியினை காசோலையாக வழங்கி வைத்தார்.




 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .