2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

உலகின் பணக்கார பட்டியலில் அமெஸோன் நிறுவனருக்கு முதலிடம்

Editorial   / 2018 ஜூன் 25 , பி.ப. 03:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரபல இணைய விற்பனைத் தளமான அமேஸோனின் நிறுவுனர் ஜெப் பெசோஸ்,  உலகின் பணக்காரர் என்ற அந்தஸ்தை தக்க வைத்துகொண்டுள்ளார். போர்ப்ஸ் பத்திரிகையானது உலகின் மதலிடத்திலுள்ள பணக்காரர் பட்டியலை இடையிடையே புதுப்பித்து வெளியிட்டுக் கொண்டிருப்பது வழமையாகும்.அந்த வகையில், ​இம்முறையும் உலகின் பணக்கார் ​பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் அமேசன் நிறுவுனர் ஜெப் பெசோஸ் முதலிடம் பிடித்துள்ளார்.

141.9 பில்லியன் அமெரிக்க டொலர்களுடன் முதலிடத்தில் உள்ளார் ஜெப். இரண்டாவது இடத்தில் பில்கேட்ஸ் உள்ளார். இவரின் சொத்து மதிப்பு 92.9 பில்லியன் அமெரிக்க டொலர்கள். பேஸ்புக்  நிறுவுனரான மார்க் 74.6 பில்லியன் அமெரிக்க டொலர்களுடன் ஐந்தாவது இடத்தில் உள்ளார்.

ஆசியாவின் பணக்காரர் என்று அறியப்படும் அம்பானி உலகப் பணக்காரர்கள் பட்டியலில் 39.6 பில்லியன் டொலர்களுடன் 22 ஆவது இடத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .