2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

13 ஆண்டுகள் சேவை செய்த ’கூகுள்’ பெண் அதிகாரி

Editorial   / 2018 ஓகஸ்ட் 16 , பி.ப. 03:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

இணையத்தள உலகில் இப்போதைய பிரபல தலைப்பாக விளங்குபவர் மரிஸா மேயர் ஆகும். கூகுளின் துணை தலைவராக பணி புரிந்த இவரை யாஹூ நிறுவனம் முதன்மை செயல் அதிகாரியாக நியமித்துள்ளது.

கூகுள் நிறுவனத்தில் 13 ஆண்டு காலமாகப் பணிபுரிந்த மரியா மேயர் யாஹூவில் இணைந்துள்ளார்.

இப்படி கூகுளில் பெரிய பதவியில் பல ஆண்டு காலமாக பணி புரிந்தவர்கள் வேறு நிறுவனத்தில் இணைந்து வருகின்றனர். கூகுளில் ஆசியா - பசிஃபிக் ஆப்பரேஷன் மேனேஜிங் டைரக்டரான சைலேஷ் ராவ், ட்விட்டரில் இணைந்ததற்கு கூகுள் தனது வாழ்த்துக்களையும் தெரிவித்திருந்தது. இருப்பினும், உயர் பதவியில் இருப்பவர்கள் அடுத்தடுத்து வேறு நிறுவனங்களுக்கு தாவி வருவது கூகுளுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தி இருப்பதாக தெரிகிறது.

இப்போது மரியா மேயர், யாஹூவில் தலைவராக இணைந்துள்ளார். இதற்கு கூகுள் இன்னும் எந்த விதமான பதிலையும் தெரிவிக்கவில்லை. இப்படி அடுத்து அடுத்து கூகுளின் உயர் அதிகாரிகள் வேறு பதவியில் இணைவதற்கு என்ன காரணம்? என்பது பற்றி இன்னும் எந்தவிதமான தகவல்களும் இதுவரை வெளியாகவில்லை.

முதன்மை செயல் அதிகாரியாக நியமிக்கப்பட்டார் என்பதை விட ஒரு பெரிய சவாலை ஏற்றுள்ளார் மரிஸா மேயர் என்று தான் சொல்ல வேண்டும். கடந்த ஆண்டு மட்டும் யாஹூ நிறுவனம் 22.7 கோடி (டாலர்) வருமானத்தை ஈட்டியிருக்கிறது. ஆனால் முந்தைய ஆண்டின் மதிப்பை விட, கடந்த ஆண்டின் வருமானம் 4 சதவீதம் குறைந்திருப்பதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

இப்போது அந்த பேச்சுகள் இன்னும் வலுவடையும் வகையில், கூகுள் நிறுவனத்தில் 13 ஆண்டு காலமாக பணி புரிந்து நிறுவனத்தை மேம்படுத்த பல வழிகளை உருவாக்கி, கூகுளின் துணை தலைவராக பணி புரிந்த மரியா மேயரை, யாஹூ தனது முதன்மை செயல் அதிகாரியாக நியமித்துள்ளது. மரிஸா மேயர் யாஹூவில் புதிய பதவியை மட்டும் ஏற்கவில்லை. கடந்த ஆண்டை விட இப்போது 4 சதவீததம் குறைவான வருமானத்தில் இருக்கும் யாஹூவை மேலே கொண்டு வரும் புதிய சவாலையும் சேர்த்து ஏற்றிருக்கிறார்.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .