2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

மௌனித்தது டைட்டானிக் இசை

George   / 2015 ஜூன் 23 , பி.ப. 03:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

டைட்டானிக் திரைப்படத்துக்கு இசையமைத்து ஒஸ்கார் விருது பெற்ற ஹொலிவூட் இசையமைப்பாளர் ஜேம்ஸ் ஹோர்னர், கலிபோர்னியாவில் ஏற்பட்ட விமான விபத்தொன்றில் தனது 61ஆவது வயதில் உயிரிழந்துள்ளார். 

பயிற்சிப்பெற்ற விமானியான ஹோர்னர், சிறிய தனியார் விமானமொன்றில் திங்கட்கிழமை காலை பறந்து கொண்டிருந்தபோது, சன்டாபார்பரா பகுதியில் விமானம் வீழ்ந்துள்ளது. 

ஜேம்ஸ் கமரூனின் அதிக வசூல் குவித்த திரைப்படங்களான டைட்டானிக், அவதார் உட்பட மூன்று திரைப்படங்களிலும், எ பியூட்டிபுல் மைண்ட், ப்ரேவ்ஹார்ட், ட்ரோய், அப்பலோ 13 ஆகிய திரைப்படங்களில் ஜேம்ஸ் ஹோர்னர் இசையமைப்பாளராக பணியாற்றியுள்ளார். 

டைட்டானிக் திரைப்படத்துக்காக ஒரு ஒஸ்கார் விருதையும், இன்னுமோர் ஒஸ்கார் விருதை சிறந்த அசல் பாடலாக செலின் டயன் பாடிய மை ஹார்ட் வில் கோ ஒன் என்ற டைட்டானிக் தீம் பாடலுக்காக பெற்றிருந்தார்.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .