2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

ஆரம்பமானது மீனவர்களின் படகு பேரணி

Niroshini   / 2021 ஒக்டோபர் 17 , மு.ப. 09:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சண்முகம் தவசீலன், விஜயரத்தினம் சரவணன்

வடபகுதி கடற்பரப்பில் இந்திய இழுவைப்படகுகளின் அத்துமீறிய சட்டவிரோத செயற்பாடுகள் தொடற்சியாக இடம்பெற்றவருகின்றன.

இதனால் வடபகுதி மீனவர்கள் வாழ்வாதர ரீதியாக பலத்த இடர்பாடுகளுக்கு முகங்கொடுத்துவருகின்றனர்.

இந்நிலையில் இந்திய இழுவைப்படகுகளின் அத்துமீறிய வருகையினையும், இந்திய இழுவைப்படகுகளின் அத்துமீறிய செயற்பாடுகளையும் கண்டித்தும், இழுவைப்படகு தடைச் சட்டத்தை அமுல்படுத்தக்கோரியும்  இன்றையநாள் வடபகுதி மீனவர்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றினை முன்னெடுத்துள்ளனர்.

அந்தவகையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒழுங்குபடுத்தலில் மேற்கொள்ளப்படும் குறித்த ஆர்ப்பாட்டம், முல்லைத்தீவு கள்ளப்பாடு கடற்கரையிலிருந்து படகுகள் மூலம் பேரணியாக ஆரம்பித்து யாழ்ப்பாணம் பருத்தித்துறையை நோக்கி செல்கின்றது.

இவ்வாறு பேரணியாகச்செல்கின்ற படகுகள், “மீனவர்களின் வாழ்வாதாரத்தினை பாதுகாருங்கள்”, “இழுவைப்படகு தடைச்சட்டத்தினை நடைமுறைப்படுத்துங்கள்” உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய பதாதைகள் மற்றும், கொடிகளை ஏந்தியவாறு பேரணியை மேற்கொண்டுள்ளன.

குறித்த பேரணி யாழ்ப்பாணம் - பருத்தித்துறையை அடைந்ததும் அங்கு  ஆர்ப்பாட்டம்  இடம்பெறவுள்ளது.

மேலும் இந்த பேரணியில் பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமநதிரன், இரா.சாணக்கியன், சி.சிறீதரன், முன்னாள் வடமாகணாசபை உறுப்பினர்களான துரைராசா ரவிகரன், சந்திரலிங்கம் சுகிர்தன், கேசவன் சயந்தன் உள்ளிட்டவர்களும் பங்கேற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .