2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

‘பலமில்லாதவர்களே என்னை விமர்சிக்கிறார்கள்’

Nirosh   / 2021 ஜூன் 17 , மு.ப. 09:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜனாதிபதி, பிரதமரின் இணக்கப்பாட்டுடன் எடுக்கப்பட்டத் தீர்மானமொன்றுக்கு, தன்னை மாத்திரம் சிலர் விமர்சிப்பதாகத் தெரிவிக்கு வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில, ஜனாதிபதி, பிரதமரின் பெயரைக் கூறி அவர்களை விமர்சிப்பதற்கு பலமில்லாதவர்களே இவ்வாறு தன் மீது விமர்சனங்களை முன்வைப்பதாகவும் தெரிவித்தார்.

வலுசக்தி அமைச்சில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு மேலும் கருத்துரைத்த அவர், எரிபொருள் விலை அதிகரிப்புத் தொடர்பில் எடுக்கப்பட்டத் தீர்மானத்தை அறிவித்து, வரலாற்றில் வேறெந்த அமைச்சர்களும் முகங்கொடுத்திராத சவாலுக்குத் தான் முகங்கொடுத்தாகவும், அரசாங்கத்தைப் பாதுகாப்பது அரசாங்கத்தில் உள்ள சிலருக்குப் பிரச்சினை என்றால், அரசாங்கத்தின் எதிரிகள் அரசாங்கத்துக்குள்ளேயே இருப்பது இதனூடாகத் தெளிவாகிறதென்றார்.

எரிபொருளின் விலைகள் அதிகரிக்கப்படாதிருந்தால், நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்து, வாழ்க்கைச் செலவு பல மடங்கு அதிகரிக்குமெனவும், எரிபொருள் விலை அதிகரிப்புத் தொடர்பில் தன்னை விமர்சிப்பவர்கள் அதற்கான மாற்றுத் திட்டத்தை முன்வைக்க வேண்டுமென்றார்.

இதேவேளை உலக சந்தையில் எரிபொருள் விலை அதிகரித்தமையால் நாட்டில் எரிபொருள் விலை அதிகரிக்கப்படவில்லை.

நாட்டுக்குக் கிடைத்துவந்த அந்நியச் செலாவணியில் ஏற்பட்டப் பற்றாக்குறைக் காரணமாகவே எரிபொருள் விலை நாட்டில் அதிகரிக்கப்பட்டது. இதுவே எரிபொருள் அதிகரிப்புக்குப் பிரதானக் காரணமெனவும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .