2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

’வெளிமாவட்டங்களில் 95 சடலங்கள் தகனம்’

Niroshini   / 2021 செப்டெம்பர் 21 , பி.ப. 01:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ் தில்லைநாதன்

 

வடக்கில், கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் சடலங்களை தகனம் செய்வதில் நெருக்கடி நிலை காணப்பட்டுள்ளமையால், 95 சடலங்கள் வெளி மாவட்டங்களில் தகனம் செய்யப்பட்டுள்ளன என, வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில், நேற்று (21) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் தொடர்ந்துரைத்த அவர், வடமத்திய மாகாணத்தில் 79 சடலங்களும் கிழக்கு மாகாணத்தில் 16 சடலங்களும் மின் தகனம் செய்யப்பட்டுள்ளன என்றார்.

அத்துடன், வடக்கில் ஓகஸ்ட் மாதம் மாத்திரம் 228 பேர் உயிரிழந்துள்ளனர் எனவும் அதன் பின்னர் இம்மாதத்தில் 20 நாள்களுக்குள் 260 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும் அவர் தெரிவித்தார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .